லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாக்.. சீனா விஷ வாயுவை காற்றில் இந்தியாவுக்கு அனுப்பி இருக்கலாம்.. உபி பாஜக தலைவர் பேச்சு

    லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா கூறுகையில், இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாக், சீனா விஷ வாயுவை காற்றில் அனுப்பி இருக்கக்கூடும் என்றார்.

    டெல்லியில் காற்று மாசுபாடு மிக அபாயக்கட்டத்தில் இருந்தது. இதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் காய்ந்த வயல்களை தீவைத்து எரிப்பதே காரணம் என்று புகார்கள் எழுந்தது. அத்துடன் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் வாயுக்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

    டெல்லியில் காற்று மாசை தடுக்க வயல்வெளிகளில் யாரேனும் தீ வைத்து எரிக்கிறார்களா என்பதை கண்காணிக்க போலீஸை அனுப்பி மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதேபோல் தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகள் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ளது.

    மோசமான காற்று மாசுபாடு.. 40 சதவீதம் டெல்லி -என்சிஆர் மக்கள் வேறு நகரில் குடியேற விருப்பம்.. சர்வே மோசமான காற்று மாசுபாடு.. 40 சதவீதம் டெல்லி -என்சிஆர் மக்கள் வேறு நகரில் குடியேற விருப்பம்.. சர்வே

    விவசாயிகள்

    விவசாயிகள்

    இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான வினீத் அகர்வால் சர்தா காற்று மாசுபடுதற்கு விவசாயிகள் காரணம் என்ற குற்றம்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    விஷ வாயு

    விஷ வாயு

    இது தொடர்பாக அவர் மீரட்டில் கூறுகையில், நமது அண்டைநாடுகளாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்ககூடும் என்று சந்தேகம் தெரிவித்தார்.

    கண்காணிக்கணும்

    கண்காணிக்கணும்

    பாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வினீத் அகர்வால் வலியுறுத்தினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் விரக்தியுடன் உள்ளது. எந்த ஒரு போரிலும் வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் ஏதேனும் தந்திரங்களை உபயோகிக்கக்கூடும் என்றார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    "டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மக்கள் மாசுபாட்டுக்கு விவசாயிகள் வயல்களை எரிப்பதும் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுவதும் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் விவசாயி என்பவர் நம் நாட்டின் முதுகெலும்பாவார். எனவே விவசாயிகளையோ மற்றும் தொழில்துறைகள் மீதோ குறை கூறக்கூடாது" என்றும் வினீத் அகர்வால் கூறினார்.

    அமித் ஷா அர்ஜூனா

    அமித் ஷா அர்ஜூனா

    பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனர் ஆக இருந்து நாட்டிற்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என்றும் பாஜக தலைவர் வினீத் அகர்வால் கூறினார்.

    English summary
    BJP leader Vineet Agarwal Sharda said, Pakistan, China May Have Released Poisonous Gas To Pollute Air In India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X