லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுத்தை பிடித்து நெரித்தார்கள்.. கீழே விழுந்தேன்.. உ.பி சம்பவம் பற்றி பிரியங்கா காந்தி ஷாக் விளக்கம்

நேற்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகார எஸ். ஆர் தாராபுரியை சந்திக்க சென்ற போது போலீசார் தன்னுடைய கழுத்தை பிடித்து நெரித்ததாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: நேற்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ். ஆர் தாராபுரியை சந்திக்க சென்ற போது உ.பி போலீசார் தன்னுடைய கழுத்தை பிடித்து நெரித்ததாக காங்கிரஸ் இளம் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக வடமாநிலங்களில் போராட்டம் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது. இதில் உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் செய்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி கைது செய்யப்பட்டார். பெயிலில் வெளியே வந்த இவரை நேற்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் பிரியங்கா காந்தி நேற்று சந்தித்தார்.

காது குடையும் குச்சியில் அடையாள மை... ஊரக உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள் காது குடையும் குச்சியில் அடையாள மை... ஊரக உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்

என்ன போலீசார்

என்ன போலீசார்

ஆனால் நேற்று பிரியங்கா காந்தி தாராபுரியை சந்திக்க சென்ற போது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினார்கள். இதனால் 3 கிமீ கால் நடையாக நடந்து சென்றும், சில கிமீ பைக்கில் சென்றும் பிரியங்கா தாராபுரியை சந்தித்தார். நேற்று இந்த சம்பவத்தின் போது போலீசார் பிரியங்கா காந்தியிடம் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.

பிரியங்கா விளக்கம்

பிரியங்கா விளக்கம்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரியங்கா காந்தி, நான் தாராபுரியை சந்திக்க சென்றேன். ஆனால் போலீஸ் எங்களை அனுமதிக்கவில்லை. அவர்களிடம் ஏன் என்று கேட்டதற்கு சரியாக விளக்கம் அளிக்கவில்லை. எங்களை மீண்டும் மீண்டும் தடுத்தார்கள்.

என்ன உரிமை

என்ன உரிமை

எங்களை கைது செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் எங்களை தடுக்க அவர்களுக்கு உரிமை இல்லை. பாஜக எங்களை பார்த்து பயப்படுகிறது. பாஜக மக்களை பார்த்து பயப்படுகிறது.

வாகனத்தில் சென்றோம்

வாகனத்தில் சென்றோம்

நான் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றேன். பெண் போலீசார் என்னை சுற்றி நின்றி கழுத்து பிடித்து நெரித்தார்கள். சட்டையை பிடித்து இழுத்தார்கள். என்னை ஒரு போலீசார் இழுத்ததில் நான் கீழே விழுந்தேன். ஆனால் நான் உறுதியாக இருந்தேன்.உறுதியாக கடைசியில் தாராபுரியை சந்தித்தேன்.

பாசிசம்

பாசிசம்

நான் இந்தியாவின் குடிமகன்களுடன் இருக்கிறேன். இந்த பாசிச அரசை நாங்கள் வீழ்த்துவோம். சத்தியாகிரக முறையில் நாங்கள் போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் போராட்டம் தொடரும், என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேஸ்புக்கிலும் போஸ்ட் செய்து உள்ளார்.

English summary
Police held my throat, I fell down, Priyanka Gandhi explains the UP incident yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X