பாத்ரூமுக்குள் கர்ப்பிணி.. டக்கென உள்ளே நுழைந்து தாழ்ப்பாள் போட்ட நபர்.. டிரஸ் வேற இல்லை.. கொடுமை
லக்னோ: மருத்துவமனை பாத்மூருக்குள் நுழைந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி நடந்துள்ளது..!
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் வன்முறைகள் வெடித்து கிளம்பி வருகின்றன.. பெண் பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகி கொண்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் பலாத்கார சம்பவங்களுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.. அங்கு நடக்கும் திருமண நிகழ்வுகளில் கூட துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறைகள் தலைதூக்கி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.
திருவாரூர்: கர்ப்பிணி மனைவி...அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஷாக் அடித்து பலி

மிர்சாபூர்
அந்த வகையில், மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.. ஒரு கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கொடுமை மருத்துவமனையில் நடந்துள்ளது.. மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு, கடந்த ஏழாம் தேதி இந்த சம்பவம் நடந்தது.. அன்றைய தினம் 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வந்தார்..

செக்கப்
அவரை டாக்டர்கள் செக்கப் செய்தனர்.. சிகிச்சையும் தந்தனர்.. பிறகு, உடல்நலம் சரியில்லாமல், உடனே வீட்டுக்கு கிளம்பி போக வேண்டாம் என்றும், அன்றைய தினம் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.. இதையடுத்து அந்த பெண்ணும், மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கர்ப்பிணி
சம்பவத்தன்று இரவு 9 மணி இருக்கும்.. மருத்துவமனையில் இருந்த பாத்ரூமுக்கு அந்த பெண் சென்றார்.. அப்போது, திபுதிபுவென, ஒரு நபர் பின்னாடியே வந்து பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டார்.. பிறகு, பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து, அவரது டிரஸ்ஸை அவிழ்த்து வீசி இருக்கிறார்.. இதனால் பதறிப்போன அந்த பெண், ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டதற்கு, டிரஸ் இல்லாமல் தான் நீ, வெளியே தப்பித்து ஓட முடியாது" என்று சொல்லி இருக்கிறார்.

அலறல்
அப்போதுதான், அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய உள்ளே வந்திருக்கிறார் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.. பாத்ரூமுக்குள்ளிருந்தே அலறி இருக்கிறார்.. அப்போது அவரது வாயை பொத்தி, மறுபடியும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.. அதற்குள் அலறல் சத்தம் கேட்டு, கேட்டு ஆட்கள் ஓடி வந்துள்ளனர்.. அவர்கள் வருவதை பார்த்ததுமே அந்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இதையடுத்து அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்..

கிளீனர்
கணவரிடம் நடந்த விஷயத்தை சொன்னதுமே, அதிர்ச்சி அடைந்த அவர், போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், அந்த நபர் அதே மருத்துவமனையில், கிளீனராக வேலை பார்க்கிறவர் என்று தெரியவந்துள்ளது.. அப்போது ஓடினவர்தான்.. அதற்கு பிறகு டியூட்டிக்கும் வரவில்லை.. எங்கே எஸ்கேப் ஆகி தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை.. போலீசார் தேடி கொண்டிருக்கிறார்களாம்...!