லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்... 5 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக செல்கிறார்

Google Oneindia Tamil News

லக்னோ: பிரதமராக பதவியேற்ற பின், நரேந்திர மோடி, அயோத்திக்கு, முதல் முறையாக பிரச்சாரத்திற்காக செல்ல உள்ளார்

கடந்த, 1987க்கு பின் நடந்த, மக்களவைத் தேர்தல் மற்றும் உத்தர பிரதேச, மாநில சட்டசபை தேர்தல்களில், வெளியிடப்பட்ட, பா.ஜ.க தேர்தல் அறிக்கைகளில், ராமர் கோவில் பிரச்சனை, முக்கிய இடம் பிடித்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, பா.ஜ.க கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மோடி, அயோத்தியில், 2014ம் ஆண்டு, மே, 5ம் தேதி, பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Prime Minister Modi first visit To Ayodhya, strong security

அதன் பின், தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராக மோடி, பதவியேற்றார். பிரதமரானதும் அவர், உத்தர பிரதேசத்துக்கு, பல முறை சென்றாலும், அயோத்திக்கு செல்லவில்லை. உத்தரபிரதேசத்தில், 2017ல், சட்ட சபை தேர்தல் நடந்தது. அப்போதும் கூட, மாநிலத்தில் பல பகுதிகளில், தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, அயோத்திக்கு செல்லவில்லை.

பக்கத்துல புதுப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு பப்ஜி ஆடிய மணமகன்.. வைரலாகும் வீடியோ பக்கத்துல புதுப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு பப்ஜி ஆடிய மணமகன்.. வைரலாகும் வீடியோ

கடந்த 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அயோத்தி மாவட்டத்திற்கு வந்த போதும் நகருக்குள் வரவில்லை. இந்தநிலையில், அயோத்தியில் இருந்து 27 கிலோமீட்டர் தூரமுள்ள மாயாபஜார் என்னுமிடத்தில் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இப்பிரச்சாரத்தில் லக்னோ, பைசாபாத் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்களுக்கும் பிரதமர் வாக்குச் சேகரிக்க உள்ளார்.

அயோத்தியின் தற்காலிகமான ராமர் கோவிலுக்கு பிரதமர் வருவாரா என்ற கேள்விக்கு பாஜகவினரிடமிருந்து உறுதியான பதில் இல்லை. இதனிடையே எதிர்க்கட்சியினரான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இன்று அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதனால், அங்கு, தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

English summary
Loksabha elections 2019: Prime Minister Modi first visit To Ayodhya For Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X