லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உபியில் 10 பேர் படுகொலை.. என் மகன் வயசுதான் இருக்கும் கொன்னுடாங்க.. கொதித்த பிரியங்கா காந்தி கைது

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா அருகே நிலத்தகராறில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு நேரில் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகே உம்பா என்ற கிராமத்தில் புதன்கிழமை அன்று 36 ஏக்கர் நிலத்திற்காக குஜார் மற்றும் கூண்ட் பழங்குடியின மக்களிடையே பெரிய அளவில் வன்முறை வெடித்தது. நிலத்தில் இருந்து பழங்குடியின விவசாய மக்கள் வெளியேற மறுத்ததால் அந்த கிராமத்தின் தலைவர் யோகா தத் தலைமையிலான 200 பேர் கும்பல், 32 டிராக்டர்களில் சென்று கொடூரமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை உலுக்கிய பயங்கர படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச போலீசார், 24 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். கிராம தலைவர் யோகதத் உள்பட 78 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலம்

பாஜக ஆளும் மாநிலம்

இந்த படுகொலை சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிவைத்து கடுமையாக விமர்சித்துள்ளார். "பாஜக ஆளும் மாநிலம் என்பதால் தங்களை எதுவும் செய்யமாட்டார்கள் என்ற நல்ல நம்பிக்கை கிரிமினல்களுக்கு இருக்கிறது. அதனால் தான் உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் பட்ட பகலில் 3 பெண்கள் உள்பட 9 பழங்குடியினத்தவர்களை கொன்று குவித்துள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.

நீங்கதான் பாதுகாத்தீர்கள்

நீங்கதான் பாதுகாத்தீர்கள்

இதற்கு பதிலடியாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத், காங்கிரஸ் அரசு கடந்த காலங்களில் நில மாபியாக்களை பாதுகாத்ததன் தொடர்ச்சியாகவே இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

நடுவழியில் தடுத்த போலீஸ்

நடுவழியில் தடுத்த போலீஸ்

இநிலையில் சம்பவம் நடந்த சோன்பத்ரா பகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று செல்ல முயன்றார் இதற்காக வாராணாசிக்கு வந்த அவர் மிர்சாபூர் வழியாக சோன்பத்ராவுக்கு செல்ல முயன்றார். ஆனால் அவரது வாகனத்தை நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் சோன்பத்ராவுக்கு செல்ல அனுமதியில்லை என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். அவருடன் காங்கிரஸ் நிரவாகிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மகன் வயது சிறுவன் கொலை

மகன் வயது சிறுவன் கொலை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, கொல்லப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் செல்ல விரும்புகிறேன். என் மகன் வயது உள்ள சிறுவனை கொன்று இருக்கிறார்கள். எதற்காக என்னை தடுக்குறார்கள் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார். இதனிடையே தர்ணாவை நிறுத்த மறுத்ததால் பிரியங்கா காந்தி போலீசார் கைது செய்து அரசு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பிரியங்கா காந்தி அவர்களிடம் என்னை எங்கே அழைத்துச்செல்கிறீர்கள். எங்கு வருவதாக இருந்தாலும் நான் வர தயாராக இருக்கிறேன் என்றார்.

English summary
Priyanka Gandhi arrested On Way To Visit Families Of 10 Shot Dead In UP. Ten persons were killed and over 24 injured in a shooting which took place over a piece of land in Sonbhadra on Wednesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X