லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பியில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் பிரியங்கா.. ஷாக்கிங் பிளான் இதுதான்!

லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி வித்தியாசமான பிளான் ஒன்றை செய்து இருப்பதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி வித்தியாசமான பிளான் ஒன்றை செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்தான் பெரும்பாலான உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் உறுப்பினர்களை தேர்வு செய்தது.

உத்தர பிரதேசத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி இங்கு தேர்தலை சந்திக்கிறது.

 இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது

என்ன கணிப்பு

என்ன கணிப்பு

லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி தேர்தலை சந்திக்கிறது என்று முடிவான போதே பலரும் காங்கிரஸ் கட்சியின் முடிவை விமர்சனம் செய்தார்கள். காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்க வேண்டும். இது பாஜக கட்சிக்குதான் சாதகம். பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரியும் என்று பலரும் கணித்தார்கள்.

போட்டி

போட்டி

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இந்த கூட்டணியில் இணையாதது குறித்து தற்போது பிரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம் என்ன

விளக்கம் என்ன

பிரியங்கா காந்தி இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணியில் இணையாதது எங்களுக்கு வருத்தம் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்கள்தான். எங்கள் திட்டம் எல்லாம் பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் கட்சியின் கணக்குப்படி அது கண்டிப்பாக நடக்கும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி விளக்கம் என்ன

பிரியங்கா காந்தி விளக்கம் என்ன

பிரியங்கா காந்தியின் திட்டம் என்ன என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி மறைமுகமாக இந்த தேர்தலில் உதவுவதாக தகவல்கள் வருகிறது. பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணியின் வாக்குகளை காங்கிரஸ் பிரிக்கவில்லை. மாறாக பாஜகவின் வாக்குகளைதான் காங்கிரஸ் பிரிக்கிறது என்று கூறுகிறார்கள்.

என்ன கணக்கு

என்ன கணக்கு

அதன்படி உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. இதில் காங்கிரஸ் 7 தொகுதியில் போட்டியிடவில்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணியின் 7 முக்கிய தலைவர்கள் போட்டியிடும் இடங்களில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. அதேபோல் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி காங்கிரசின் ராகுல் மற்றும் சோனியா போட்டியிடும் தொகுதியில் போட்டியிடவில்லை. இதனால் இவர்கள் நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் 71.

கணிப்பு என்ன

கணிப்பு என்ன

ஆனால் இந்த 71 தொகுதியில் 22 தொகுதிகள் கண்டிப்பாக பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி வெற்றிபெற போகும் தொகுதிகள். அதேபோல் 7 தொகுதிகள் கண்டிப்பாக காங்கிரஸ் வெற்றிபெற போகும் தொகுதிகள். இதனால் இங்கு முடிவுகள் மாறாது. மாறாக 42 தொகுதியில் மட்டுமே பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி மற்றும் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதுகிறது.

ஆனால் என்ன நடக்கும்

ஆனால் என்ன நடக்கும்

ஆனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் ஆட்கள் எல்லாம் பாஜகவிற்கு போட்டியான வேட்பாளர்கள் மட்டுமே. பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி எந்த ஜாதியை சேர்ந்தவரை நிறுத்தி உள்ளதோ அந்த ஜாதியை தவிர்த்துவிட்டு, பாஜக நிறுத்தி இருக்கும் வேட்பாளரின் ஜாதியை சேர்ந்தவரை மட்டுமே காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. அதாவது பாஜக வாக்குகளை பிரிப்பதற்காக காங்கிரஸ் மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளது.காங்கிரசால் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.

காங்கிரஸ் திட்டம் இதுதான்

காங்கிரஸ் திட்டம் இதுதான்

இந்த 42 தொகுதிகளில் காங்கிரஸ் எப்படி நினைத்தாலும் வெல்ல முடியாது. இதனால் பாஜகவின் வாக்குகளை பிரிக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. அதை மனதில் வைத்துதான் பிரியங்கா காந்தி பேரணிகள் திட்டமிடப்பட்டது என்றும் கூறுகிறார்கள். பிரியங்கா காந்தியின் இந்த வாக்குகளை பிரிக்கும் திட்டம் எப்படி முடிய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Priyanka Gandhi's tacit Understanding With SP-BSP may give BJP a massive shock in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X