லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்-வீடியோ

    லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சோனபத்ரா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என நேற்று இரவு முதல் தர்ணா நடத்திய பிரியங்கா காந்தி விடிய விடிய இரண்டாவது நாளாகவும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்னையால் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரியங்கா

    இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் பாஜக அரசையும் விமர்சனம் செய்தார். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருவதையும் பிரியங்கா தெரிவித்தார்.

    ஆறுதல்

    ஆறுதல்

    இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி நேற்று நேரில் சென்றார். முதலில் வாரணாசி வந்திறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    இதையடுத்து அவர் சோன்பத்ராவுக்கு புறப்பட்டார். ஆனால் அவரை போலீஸார் பாதியிலேயே நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து பிரியங்கா தர்ணா செய்தார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் அமர்ந்து கொண்டனர்.

    விடிய விடிய போராட்டம்

    தன்னுடைய விடுதியின் முன்பு அவர் தர்ணா செய்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து அவர் போராட்டத்தை மேற்கொண்டார். இந்த நிலையில் விடிய விடிய போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி இன்றைய தினமும் தர்ணாவை தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து சோனபத்ரா துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் பிரியங்கா காந்தி தங்கியுள்ள விடுதியில் சென்று பார்த்தனர். எனினும் இன்னும் சிலரை போலீஸார் அனுமதிக்கவில்லை என பிரியங்கா கூறினார்.

    English summary
    Priyanka Gandhi made sit in agitation in UP for police not allowing her to meet family members of the victims of Sonbhadra's firing case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X