லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாள் கங்கையில் பயணம்.. பின் வாரணாசியில் கூட்டம்.. அட வித்தியாசமாக பிரச்சாரம் செய்யும் பிரியங்கா!

லோக்சபா தேர்தலுக்கு இன்றில் இருந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Gandhi Ganga Yatra: 3 நாள் கங்கையில் பயணம்.. பின் வாரணாசியில் கூட்டம்- வீடியோ

    லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு இன்றில் இருந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்கு தமிழகம் போலவே அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகிறது. காங்கிரஸ் சார்பாக உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் அதிக கவனம் ஈர்த்து உள்ளார்.

    லோக்சபா தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மாதிரியான பலனை ஏற்படுத்துவார், தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தற்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    சூப்பர் ஸ்டார்கள் மோதும் தூத்துக்குடி.. கொடி நாட்ட துடிக்கும் பேரரசு கவுதமன்.. கலவரத்தில் கட்சிகள்! சூப்பர் ஸ்டார்கள் மோதும் தூத்துக்குடி.. கொடி நாட்ட துடிக்கும் பேரரசு கவுதமன்.. கலவரத்தில் கட்சிகள்!

    எப்படி தொடங்குவார்

    எப்படி தொடங்குவார்

    இன்று தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் பிரியங்கா காந்தி. கங்கை நதியில் பூஜை செய்து, வழிபாடு நடத்த உள்ளார் அவர். அதன்பின் பிரயாகராஜில் (அலஹாபாத்) இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். மூன்று நாட்கள் இந்த பிரச்சாரம் நடக்கும்.

    படகில் செல்வார்

    படகில் செல்வார்

    இந்த மூன்று நாட்களும் இவர் கங்கை நதியில் சென்று பிரச்சாரம் செய்வார். இவரது பயணம் முழுக்க கங்கை வழியாகவே இருக்கும். 145 கிமீ தூரம் இவர் கங்கையில் படகில் செல்ல போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கங்கா யாத்ரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    உள்ளே சென்று பேசுவார்

    உள்ளே சென்று பேசுவார்

    படகில் செல்லும் இவர் கரையோர கிராமங்களில் இறங்கி பிரச்சாரம் செய்வார். நிறைய கிராமங்களுக்கு செல்ல இதில் திட்டமிடப்பட்டு உள்ளது. கிராமங்களில் பிரச்சார மேடைகள் அமைத்து பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும் பிரியங்கா காந்தி திட்டமிட்டு இருக்கிறார்.

    யாரை கவர போகிறார்

    யாரை கவர போகிறார்

    முக்கியமாக மீனவ மக்கள், கங்கையை நம்பி இருக்கும் மக்கள், தலித் மக்களின் ஓட்டுகளை கவர திட்டமிட்டுள்ளார். அதேபோல் ராஜ்பூட்கள், பிராமணர்களின் ஓட்டுக்களை வாங்கவும் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த கங்கை செல்லும் இடங்களில் இவர்களே அதிகம் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்கே முடிவு

    எங்கே முடிவு

    அதன்பின் 3 நாட்கள் கழித்து இந்த பயணம் முடிவடைகிறது. வாரணாசியில் இந்த பிரச்சார கூட்டம் முடிய உள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மூன்று நாட்கள் கங்கையில் பிரச்சாரம் செய்துவிட்டு , நேரடியாக களமிறங்கி பேச உள்ளார் பிரியங்கா காந்தி.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    இதற்காக வாரணாசியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கங்கை பயணம் மிகவும் வித்தியாசமாக இருக்க போகிறது. அரசியல்வாதிகள் யாரும் இதுவரை இப்படி செய்தது இல்லை என்று கூறுகிறார்கள்.

    English summary
    Priyanka Gandhi will take 145 km ride in Ganga named Ganga Yatra: Plans for BIG rally in Uttar Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X