லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது அரசியல் அல்ல.. 'அறம்' சியல்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலான ஒற்றை படம்

Google Oneindia Tamil News

லக்னோ: ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த போது, கதறி அழுத பெண்ணை கட்டிப்பிடித்து தோளில் சாய்த்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இது அரசியல் அல்ல.. 'அறம்' சியல்.. இந்திரா காந்தியாகவே பிரியங்கா மாறிவிட்டார் என காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், ராஜீவ் காந்தியின் மகனாகிய ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் என்றாலும் ராகுல் காந்தி தான் அக்கட்சியின் சக்தி வாய்ந்த தேசிய தலைவராக உள்ளார். ஹத்ராஸ் விவகாரத்தில் உத்தரப்பிரதேச போலீசார் அவரை நடத்திய விதம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனால் பொங்கி எழுந்த ராகுல் காந்தி மற்றும் அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் நாங்கள் மீண்டும் ஹத்ராஸ் செல்வோம். இந்த முறை எங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஆவேசத்துடன் நேற்று காரில் புறப்பட்டனர்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின்

பிரியங்காவுக்கு அனுமதி

பிரியங்காவுக்கு அனுமதி

பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுலை காரில் அமர வைத்து அவரே காரை ஓட்டிச்சென்றார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் இவர்களை தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காரை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்கவில்லை.

சலசலப்புக்கு அஞ்சவில்லை

சலசலப்புக்கு அஞ்சவில்லை

காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்ட முயன்ற போது, என்னை மீறி இவர்கள் கை வையுங்கள் பார்ப்போம் என்ற போலீசாரின் லத்தியை பிடித்துதள்ளி ஆவேசம் காட்டினார். இதனால் மிரண்டபோலீசார் யாரையும் எதையும் செய்யவில்லை. கொஞ்சம் நேர சலசலப்புக்கு பின்னர் அங்கிருந்து காரில் பிரியங்கா காந்தி ராகுலுடன் புறப்பட்டு சென்றார். சுமார் 130 கிலோமீட்டர் தூரம் பயணித்த அவர் இறுதியாக ஹத்ராஸ் சென்றார்.

தைரியம் கொடுத்த ராகுல்

தைரியம் கொடுத்த ராகுல்

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு, நீதி கிடைக்க இறுதி வரை போராடுவோம் என்றார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர். கதறி அழுத போது. கட்டித்தழுவி அரவணைத்து பிரியங்கா காந்தி ஆறுதல் கோரினார். ராகுல் காந்தி, மண்டியிட்டு அமர்ந்து என்ன நடந்தது என்பதை பொறுமையாக கேட்டு தைரியமாக இருக்கும்படி கூறினார்.

பிரியங்கா காந்தி கோரிக்கை

பிரியங்கா காந்தி கோரிக்கை

இதன்பின்னர் பிரியங்கா காந்தி பேசும் போது, குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். நீதி வழங்கப்படும் வரை, இந்த போராட்டத்தை நாங்கள் தொடருவோம், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பையும் விரும்புகிறார்கள்" என்றார்.

இந்திரா காந்தியான பிரியங்கா

இந்திரா காந்தியான பிரியங்கா

இதற்கிடையே பிரியங்கா காந்தி கட்டித்தழுவி அரவணைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில வைரல் ஆகியது. பிரியங்காவின் செயலில், உருவத்தில் இந்திரா காந்தி தெரிகிறார் என காங்கிரஸ் தொண்டர்கள் பலர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். பிரியங்காவின் நேற்றைய அதிரடி அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா காங்கிரஸில் தலைமை பொறுப்பேற்று அதற்கு புத்துணர்வு அளிக்க வேண்டும் என்று குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

English summary
Emotional moment in Bhoolgarhi village in Hathras. Victim’s mother hugs Priyanka Gandhi Vadra. this image viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X