லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயநாட்டில் பிரமாண்ட வெற்றி.. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ராகுல் காந்திதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

    நாடுமுழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் பாஜக பெருவாரியான தொகுதிகளை வசமாக்கியுள்ளது.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. நாடு முழுவதும் பாஜக 340 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. நீங்க இதை கவனீச்சிங்களா? எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. நீங்க இதை கவனீச்சிங்களா?

    அமேதியில் பின்னடைவு

    அமேதியில் பின்னடைவு

    அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்தார். ஆனால்முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.

    ரேபரேலியில் முன்னிலை

    ரேபரேலியில் முன்னிலை

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானியிடம் காங்கிரஸ் கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார் ராகுல். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்..

    வயநாட்டில் வெற்றி

    வயநாட்டில் வெற்றி

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ராகுல்காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 12,76,945 வாக்குகள் பெற்ற ராகுல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    காங்கிரசுக்கு பின்னடைவு

    காங்கிரசுக்கு பின்னடைவு

    நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதரக்கட்சிகள் 100க்கும் மேற்பட்டஇடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

    English summary
    Lok sabha vote count: Rahul Gandhi leading in Amethi and Congress senior leader Soniya leads in Rebareli.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X