லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கூலிங்கிளாஸ்.. பிங்க் கலர் புடவை.. மீண்டும் பரபரக்க வைத்த ரீனா திவிவேதி!

உபி இடைத்தேர்தலில் பிங்க் நிற சேலையில் வந்தார் பெண் தேர்தல் அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    Reena Dwivedi returns in Pink saree | பிங்க் கலர் புடவை..மீண்டும் பரபரக்க வைத்த ரீனா திவிவேதி!

    லக்னோ: அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். கூலிங்கிளாஸ்.. ஆனா புடவை கலர் மட்டும் மஞ்சள் இல்லை.. பிங்க்! "முந்தானை முடிச்சு" படத்தில் தீபா வருவாரே.. அதே மாதிரி இருக்கிறார் இந்த தேர்தல் அதிகாரி.. இவர்தான் உ.பி.யில் இந்த முறையும் ஹாட் டாப்பிக் ஆனவர்.. பெயர் ரீனா திவிவேதி!

    வடமாநிலங்களில் தேர்தல் என்றாலே இன்டர்நெட்டை சமீப காலமாக கலக்கி வருவது ரீனா திவிவேதிதான். இன்டர்நெட்டின் வைரல் நாயகி இவருக்கு ஒரு பட்டப்பெயரை வைத்து இவரது போட்டோவை பலரும் ஷேர் செய்ய ஆரம்பித்தது கடந்த மே மாதம் உபி மாநில தேர்தலின்போதுதான்!

    இவர் ஒரு அரசு ஊழியர், அந்த மாநில பொதுப் பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். உ.பியில் நடந்த 5வது கட்ட வாக்குப் பதிவின்போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றினார்.

     தம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா?! தம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா?!

    அதிகாரி

    அதிகாரி

    அதுதொடர்பான போட்டோக்கள் ஏற்கனவே தற்போது வைரலானது. "கவர்ச்சிகரமான உடையுடன் கூடிய இந்த அதிகாரியைப் பாருங்க" என்றுதான் இந்த போட்டோவுக்கு கேப்ஷனை நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தார்கள். ஆனால், ரீனா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சந்தோஷமாகவே எடுத்து கொண்டார். இதை பற்றி ரீனா அன்று சொன்னது என்ன தெரியுமா?

    வைரல் போட்டோ

    வைரல் போட்டோ

    "எனக்கு 32 வயசாகுது.. சீக்கிரமே கல்யாணமாயிடுச்சு. குழந்தைகளும் உள்ளனர். நான் ஒரு அரசு ஊழியர். பொதுப்பணித்துறையில் பணியாற்றுகிறேன். என் போட்டோ வைரலாகி விட்டது ஆச்சரியமாக உள்ளது. மகிழ்ச்சியும் தருகிறது. ஆனா, இது முதல் முறையல்ல. 2014 தேர்தலின்போதும் கூட எனது போட்டோ வெளியானது" என்று கூறியிருந்தார்.

    கிருஷ்ணா நகர்

    கிருஷ்ணா நகர்

    இந்த முறையும் உபி தேர்தலுக்கும் ரீனா வந்திருந்தார்.. இப்போ மஞ்சள் இல்ல.. பிங்க் கலர் சேலையில் கையில் தேர்தல் குறிப்புகள் அடங்கிய பெட்டியுடன் வந்திருந்தார். லக்னோவில் கிருஷ்ணா நகர் இடைத் தேர்தலில் நடந்த வாக்குசாவடிக்கு வந்து கலக்கினார். எப்படியும் 100 சதவீதம் வாக்கு இங்கு பதிவாகி இருக்கும் என நம்பலாம். அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி இவரது போட்டோக்களை ஷேர் செய்வது எந்த அளவுக்கு தவறான நோக்கத்தில் இவர் பார்க்கப்பட்டுள்ளார் என்பதையும் இது தெளிவுபடுத்தி கொண்டே வருகிறது.

    பாசிட்டிவ் எனர்ஜி

    பாசிட்டிவ் எனர்ஜி

    அதே சமயம் இதை நாம் ஏன் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு தேர்தல் அதிகாரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை ரீனா உடைத்தெறிந்து வருகிறார். பார்ப்பவர்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருவதாககூட எடுத்து கொள்ளலாமே.. எல்லாமே நாம் ஆழ் மனசு அடிப்படை குணத்திலும் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது!

    English summary
    yellow saree reena dwivedi officer return this time in pink for up byelection at lucknow and this photos are viral in socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X