லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இஸ்லாம் மதத்திற்கு எதிரானது!" உதய்பூர் டெய்லர் கொடூர கொலை.. முஸ்லீம் அமைப்புகள் கடும் கண்டனம்!

Google Oneindia Tamil News

லக்னோ: உதய்பூர் டெய்லர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Udaipur படுகொலை நடந்தது என்ன? NIA KanhaiyaLal மனிதம் தேவை..மதவெறி இல்லை

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஹாதி போல் பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்தவர் கன்ஹையா லால். இவர் நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     சர்வதேச தொடர்புகள்! உதய்பூர் டெய்லர் கொலையில் பெரும் சதி? என்ஐஏ-ஐ களமிறக்கிய உள் துறை அமைச்சகம் சர்வதேச தொடர்புகள்! உதய்பூர் டெய்லர் கொலையில் பெரும் சதி? என்ஐஏ-ஐ களமிறக்கிய உள் துறை அமைச்சகம்

    சமீபத்தில் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்து இருந்தார்.

     பேஸ்புக் போஸ்ட்

    பேஸ்புக் போஸ்ட்

    இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில், அவர் மீது பாஜக கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்தது. நுபர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹையா லால் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அவரிடம் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

     கொலை

    கொலை

    இந்தச் சூழலில் நேற்று அவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உதய்பூரில் டெய்லர் கொலையைக் கண்டித்துள்ளது.

     இஸ்லாமிய அமைப்புகள்

    இஸ்லாமிய அமைப்புகள்

    சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது மற்றும் இஸ்லாத்திற்கு எதிரானது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஹஸ்ரத் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு மதத்தினரையும் அவதூறாகப் பேசுவது குற்றம். (முன்னாள்) பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபிக்கு எதிராகப் பேசிய இழிவான வார்த்தைகள் முஸ்லீம் சமூகத்திற்கு மிகவும் வேதனை அளித்தன.

     இஸ்லாம் மதத்திற்கு எதிரானது

    இஸ்லாம் மதத்திற்கு எதிரானது

    இதில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக இருந்தது. இருந்த போதிலும், யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது. ஒருவரைக் குற்றவாளி எனக் கூறி கொலை செய்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களைச் சட்டமோ, இஸ்லாமிய ஷரியாவோ அனுமதிக்கவில்லை. உதய்பூரில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த விவகாரத்தில், வாரியம் முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்ட வழிகளை மட்டுமே நாட வேண்டும். மதங்களை அவமதிக்கும் நபர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய ஒரு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்" என்று எதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பும் உதய்பூர் கொலை சம்பவத்தைக் கண்டித்துள்ளது.

     அமைதி

    அமைதி

    இது போன்ற சம்பவங்கள் நியாயப்படுத்த முடியாது என்றும் இஸ்லாம் மற்றும் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தப் படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ராஜஸ்தானில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Muslim Board condemned the cold-blooded murder of a tailor in Udaipur: (உதய்பூர் டெய்லர் கொலை இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்) Udaipur murder latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X