லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"என் மவுலியை காணோம்.. யாராவது பாத்தீங்களா.. ரூ.20,000 தரேன்" தவிக்கும் சனம் அலிகான்!

Google Oneindia Tamil News

லக்னோ: "என் மவுலியை காணோம்.. யாராவது பாத்தீங்களா.. ரூ.20 ஆயிரம் தரேன்" என்று ஒருவர் விளம்பரம் செய்துள்ளார்.

உத்திரபிரதேசம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலிகான். 37 வயதாகும் இவர் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 9 வருடங்களாக ஒரு கிளியை செல்லமாக வளர்த்து வந்தார்.

அந்த பச்சைக்கிளிக்கு மவுலி என்று பெயர் வைத்தார். தினமும் அந்த கிளியுடன் சனம் பேசிக் கொண்டே இருப்பாராம். கிளியும் நன்றாக பதிலுக்கு பேசுமாம். ஆனால் சில நாட்களாக மலியை காணவில்லையாம். சனம் எங்கெங்கோ தேடிப் பார்த்திருக்கிறார். கிளி கிடைக்கவே இல்லை.

மன உளைச்சல்

மன உளைச்சல்

இதனால் சோகமாவே இருந்திருக்கிறார். பின்னர்., 'வாட்ஸ் அப்'பில் காணாமல் போன அந்த மவுலியின் போட்டோவை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். மவுலியை பார்த்தால் உடனே தகவல் சொல்லும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் யாருமே எந்ததகவலும் சொல்லவில்லை. இதனால் நாளுக்கு நாள் மன உளைச்சல்தான் அதிகமாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது ஒரு விளம்பம் அளித்திருக்கிறார்.

சைக்கிள் ரிக்‌ஷா

சைக்கிள் ரிக்‌ஷா

கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரிம் பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல, இதை பற்றி பொதுமக்களிடம் சொல்வதற்கென்றே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் ஸ்பீக்கர்களை கட்டிவிட்டு, இந்த அறிவிப்பினை சொல்வதற்கென்றே ஆட்களையும் வைத்திருக்கிறார்.

பேரிழப்பு

பேரிழப்பு

இதுபற்றி சனம் சொல்லும்போது,"எங்க மவுலி ரொம்ப புத்தியசாலி. யார் என்ன கேள்வி கேட்டாலும் உடனே டக் டக்கென பதில் சொல்லும். ரொம்பவும் அன்பாக வளர்த்தோம். அது காணாமல் போனது குடும்பத்துக்கே பேரிழப்பு. சீக்கிரமா அது திரும்பி வரணும்னு பிரார்த்தனை செய்துகிட்டு இருக்கோம்" என்றார்.

ஹிந்தி படம்

ஹிந்தி படம்

அது மட்டுமல்ல, இந்த கிளிக்கு அந்த பெயரை ஏன் வைத்தோம் என்று காரணம் சொல்கின்றனர் குடும்பத்தினர். "1998-ம் ஆண்டு மவுலி என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆச்சு. அது ஒரு கிளியை பத்தின படம். ஒருநாள் நாங்க டெல்லிக்கு போனோம்.

பிளாஷ்பேக்

பிளாஷ்பேக்

அப்போதான் எங்க மவுலியை நாங்க முதன்முதலா பார்த்தோம். ஏற்கனவே வளர்த்து வந்தவரின் கவனக்குறைவால் பறந்து வந்துவிட்டிருந்தது. அப்பறம்தான் நாங்கள் எடுத்து வளர்த்தோம். யார் கண்டுபிடிச்சு தந்தாலும் 20 ஆயிரம் தந்திடறோம்" என்று ஒரு பெரிய ஃபிளாஷ்பேக்கையே ஓட்டிவிட்டனர் குடும்பத்தார்! மவுலி... வேர் ஆர் யூ?!

English summary
Sanam in Uttar Pradesh, announced that the 20 thousand rupees will be recovered if he finds the Parrot
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X