லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவிற்கு எதிராக திரும்பிய "ஜாதி".. காப்பாற்றுமா "மதம்.." ஸ்ட்ரெயிட்டா களத்திற்கு வரும் ஆர்எஸ்எஸ்

பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்ய போகிறதாம்

Google Oneindia Tamil News

லக்னோ: இந்த முறை நடக்க போகும் தேர்தல் மிக வித்தியாசமானது.. மதமா, மதச்சார்பின்மையா? இந்த தேர்தலில் வெல்லப்போவது எந்த சக்தி என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது..!

சாதி இல்லை என்று சொல்லி கொண்டே, சாதியை நிலைநிறுத்தும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக வடமாநிலங்களான பீகார், உபியில் சாதீய அழுக்கு நிறையவே படிந்துள்ளது.. இதற்கு காரணம், போதுமான மற்றும் பரவலான கல்வியறிவு அவர்களுக்கு கிடைக்காததுதான்.

சாதி ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, சாதிய வன்முறைகள், இப்படி பல பெயர்களை வைத்துதான் அங்கு காலம் காலமாக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது..

கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்! கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்!

மாயாவதி

மாயாவதி

அதனால், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மையாகும். இந்த முறை தேர்தலை எடுத்து கொண்டால், தலித் பெண்அரசியல்வாதியான மாயாவதி ஒதுங்கிவிட்டார்.. அப்படியானால் தலித் மக்களை அரவணைக்கும், அவர்களின் ஓட்டுக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் இதர கட்சிகள் இப்போதே தொடங்கவிட்டன.. மற்றொருபுறம் ஆளும் பாஜகவில் இருந்தே பல சீனியர் அமைச்சர்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டனர்..

 தலித் சமுதாயம்

தலித் சமுதாயம்

சமீபத்தில் வெளியான 3 அமைச்சர்கள் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர்.. அதாவது, யோகி ஆட்சியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.. இந்த குற்றச்சாட்டை அகிலேஷ் யாதவ் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயன்றுள்ளார்.. யாதவர் கட்சி என்ற அடையாளத்துடன் சமாஜ்வாடி செயல்பட்டாலும், அகிலேஷின் அப்பா யாதவர்களின் நலனுக்காகவே பாடுபட்டாலும், யாதவர் அல்லாத ஓபிசி வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்குப் பெருமளவில் கிடைக்கும் என்று அகிலேஷ் புது கணக்கு போட்டு வருகிறார்..

 சாதி கட்சிகள்

சாதி கட்சிகள்

அப்படியானால் யோகிக்கு எந்த மாதிரியான பலம் இருக்கிறது என்று பார்த்தால், தாகூர், ராஜ்புட் போன்ற கட்சிகள் பெரிதும் கைகொடுக்கின்றன.. கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே சாதிதான்... இந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அத்தனை அரசுஅதிகாரிகளும் இந்த 2 சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதால், இவர்களின் முழு ஆதரவும் யோகிக்கு முழுமையாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.. சாதீய கணக்குகள் இப்படி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த முறை பாஜகவுக்காக, ஆர்எஸ்எஸ் நேரடியாகவே பிரச்சாரம் செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 மறைமுக மோதல்

மறைமுக மோதல்

பாஜகவில் இருந்து சீனியர் அமைச்சர்கள், சமாஜ்வாடி கட்சிக்கு தாவிஉள்ள சூழலில், இந்த முறை சாதீய மோதல் சற்று வீரியம் மிக்கதாகவே அதிகரித்துள்ளது.. முன்னேறிய சாதி தலைவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கும் இடையே இந்த மோதல் மறைமுகமாகவே உருவாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. அப்படி ஒருவேளை இந்த மோதலில் பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் சாதி வென்றால், அது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு விடும் என்கிறார்கள்.. அதனால்தான், பாஜகவின் வெற்றியை பாதிக்காதவாறு அக்கட்சிக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்ய பிளான் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம்

பிரச்சாரம்

நேரடியாகவும், தொண்டர்கள் மூலமாகவும், தன்னுடைய முன்னணி அமைப்புகளை வைத்தும் இந்த பிரச்சாரத்தை பாஜகவுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, அயோத்தி முதல் காசி வரை பாஜகவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்ய போகிறதாம்.. இந்துத்துவாவை ஆழமாக ஊன்றி, அதேசமயம், பாஜகவை மீண்டும் வெற்றி பெற வைக்கும் முயற்சியைதான் ஆர்எஸ்எஸ் வியூகமாக செயல்படுத்த போகிறதாம்..

இந்துத்துவா

இந்துத்துவா

ஆனால், அதேசமயம் யோகி மீதான விமர்சனங்களை இந்துத்துவா மட்டுமே சரிசெய்துவிடாது என்று அரசியல் நோக்கர்கள் கணக்கு போடுகிறார்கள்.. இத்தனை ஆண்டு காலம் யோகி ஆண்டும், அந்த மாநிலம் பெரிய அளவுக்கு முன்னேறிவிடவிடவில்லை, வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், வறுமை, பட்டினி, கல்வியில் பின்தங்கியது, கொரோனாவை மோசமாக கையாண்டது, கங்கையில் மிதந்த பிணங்கள், என எத்தனையோ அதிருப்திகளை யோகி பெற்றுள்ளார்..

 இந்து தர்மம்

இந்து தர்மம்

வெறும் இந்து தர்மத்தை வைத்தோ, ராமர் கோயில் கட்டுவதை வைத்தோ, ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரங்களை வைத்தோ, அவைகளை முறியடிக்க முடியாது என்பதே அரசியல் நிபுணர்களின் ஆழமாக கருத்தாக உள்ளது.. இந்த முறை உபியில் வெல்ல போவது மதமா? மதச்சார்பின்மையா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்கலாம்..!

English summary
RSS prepares a campaign plan in UP to boost election prospects for BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X