லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு வளையல்.. வீரர்களின் மனைவிமார்களின் கதறல் மனசை என்னவோ செய்கிறது.. விற்று உதவிய பிரின்சிபல்

வீரர்களின் குடும்பத்துக்கு வளையலை விற்று பள்ளி ஆசிரியை உதவி செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: "எனக்கு எதுக்கு இந்த தங்க வளையல்.. அங்கே வீரர்களின் மனைவிமார்கள் கதறி அழுவது என் மனசை என்னவோ செய்கிறது" என்று கூறி பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் கையில் அணிந்திருந்த வளையல்களை விற்று நிதி உதவி செய்திருக்கிறார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 ந்தேதி தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் உதவ ஒரு பெண் முன் வந்திருக்கிறார்.

ஒன்றரை லட்சம்

ஒன்றரை லட்சம்

இவர் உத்திரபிரதேசத்தில் ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆவார். இவர் பெயர் கிரண் ஜக்வால்.
48 வயதாகிறது. தனது கையில் இருந்த தங்க வளையல்களை விற்று ஒன்றரை லட்ச ரூபாயை அந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவியாக தந்துள்ளார்.

தங்க வளையல்

தங்க வளையல்

எனக்கு "ராணுவத்தினருடைய மனைவிமார்கள் கதறி அழுகிறார்கள். அந்த வீடியோக்களை எல்லாம் டிடிவியில் பார்த்து வருகிறேன். அந்த அழுகை என் மனதை ரொம்பவும் கஷ்டப்படுத்துகிறது. எனக்கு எதுக்கு இந்த தங்க வளையல்..?

ஒரு ரூபாய்

நாட்டு மக்கள் எல்லாருமே இவர்களின் குடும்பத்துக்கு உதவ வேண்டும். நாட்டின் ஜனத்தொகை 130 கோடி இருக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒரு ரூபாய் கொடுத்தால்கூட பெரிய நிதியை வசூலித்து அந்த குடும்பங்களுக்கு உதவிட முடியும்" என்று கேட்டு கொண்டுள்ளார்.

English summary
UttarPradesh School HM sold bangles and helped to Kashmir Soldiers'family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X