லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்

வகுப்பு ஆசிரியரை சுற்றி வளைத்து மாணவர்கள் தாக்கி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    டீச்சரை சுற்றி சூழ்ந்து தாக்கிய மாணவர்கள் !

    லக்னோ: டீச்சரை கிளாஸ் ரூமிலேயே மாணவர்கள் சேர் எடுத்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் டீச்சர் பிள்ளைகளை பார்த்து சொல்லிய அந்த ஒற்றை வார்த்தைதான்!

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு டீச்சராக வேலை பார்ப்பவர் மம்தாதுபே.. இவர் குழந்தைகள் நல அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    school teacher attacked by her class students in raebareli

    இந்நிலையில், வகுப்பில் வழக்கம்போல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து இவரை சரமாரியாக தாக்கினர். அதிலும் ஒரு மாணவன் அங்கிருந்த சேரை எடுத்து டீச்சர் மீது தூக்கி வீசினான்.. மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் மம்தாதுபே அங்கிருந்து தப்பித்து கொண்டு வெளியே ஓடினார்.

    இப்படி மாணவர்கள் டீச்சரை அடிப்பதும், சேரை தூக்கி வீசுவதும், பிறகு அவர் கிளாஸ் ரூமில் இருந்து தப்பித்து ஓடுவதும், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிவிட்டது.. முதலில் டீச்சரிடம் ஆவேசமாக மாணவர்கள் பேசுகிறார்கள்.. பிறகுதான் தாக்க தொடங்குகிறார்கள்.. இந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை பற்றி கல்வி நிறுவனத்தின் மேலாளர் சொல்லும்போது, ஆசிரியை மம்தாதுபே மாணவர்களை "அனாதைகள்" என்று சொல்லிவிட்டாராம்... வழக்கமாக டீச்சர் பசங்களை இப்படித்தான் திட்டுவாராம்.. எப்ப பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கவும், மாணவர்கள் சூடாகி விட்டார்கள் போல தெரிகிறது என்றார்.

    ஆனால் ஆசிரியை மம்தா துபே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காந்தி சேவா நிகேதன் மேலாளர்தான் தன்னை தாக்குமாறு குழந்தைகளை தூண்டி விட்டுள்ளார்.. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருக்கிறது.. இதெல்லாம் அவர்வேலைதான்.. ஏற்கனவே என்னை டிஸ்மிஸ் செய்தார்கள்.. ஆனால் கலெக்டர் உதவியுடன் திரும்பவும் வேலைக்கு வந்துவிட்டேன். அந்த கலெக்டர் இப்போது டிரான்ஸ்பர் ஆகிபோய்விடவும் திரும்பவும் என்னை டிஸ்மிஸ் பண்ண மேலாளர் முயற்சிக்கிறார்" என்றார்.

    இந்த சம்பவத்தில் உண்மை காரணம் நமக்கு எதுவென்று தெரியாது.. எனினும் மாணவர்கள் டீச்சரை தாக்குவது வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் உள்ளது!

    English summary
    school students thrash their class teacher near raebareli and this video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X