லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை

Google Oneindia Tamil News

லக்னோ: மகனைப் பறி கொடுத்த துயரத்தை துடைத்தெறிந்து விட்டு 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்த 82 வயதான முகமது ஷரீப்பிற்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் இந்த ஆண்டு 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவற்றோர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த முகமதசு ஷரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தாளுநர்

மருந்தாளுநர்

82 வயதான முகமது ஷரீப் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தை சேர்ந்தவர். இவர் சைக்கிளி மெக்கானிக். இவர் இருக்கும் பகுதியில் ஷரீப் சாச்சா என அன்போடு அழைக்கப்படுகிறார். 1992-ஆம் ஆண்டு இவரது மகன் முகமது ராஸ் கான் மருந்தாளுநர் பணிக்காக சுல்தான்பூருக்கு சென்றிருந்தார்.

சடலம்

சடலம்

அவரை ஒரு மாதமாக காணவில்லை. இதையடுத்து சிதிலமடைந்த அவரது சடலம் ஒரு கோணிப்பையில் கட்டப்பட்டு சாலையில் கிடந்தது. இதை பார்த்த முகமது ஷரீப் கதறி அழுதார். பத்மஸ்ரீ விருது குறித்து ஷரீப் கூறுகையில் என் மகனை ஆதரவற்ற நிலையில் கோணிப்பையில் சடலமாக பார்த்ததை என்னால் மறக்க முடியாது.

சடலங்கள்

சடலங்கள்

அன்று முதல் நான் ஒரு முடிவு செய்தேன். அதன்படி எந்த ஒரு ஆதரவற்ற சடலங்களும் தெருவில் உள்ள விலங்களால் நாசம் செய்யப்படக் கூடாது என்பதை முடிவு செய்தேன். அனைத்து உயிர்களுக்கும் செய்ய வேண்டிய ஈமச் சடங்குளை செய்ய வேண்டும். அதனால் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நான் அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறேன்.

ஈமச் சடங்குகள்

ஈமச் சடங்குகள்

பிணவறை, மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்களுக்கு தினந்தோறும் செல்வேன். அங்கு ஏதேனும் ஆதரவற்ற சடலங்கள் இருக்கிறதா என பார்ப்பேன். அங்குள்ள அதிகாரிகளும் 72 மணி நேரத்திற்கு மேல் சடலத்துக்கு யாரும் உரிமை கோராவிட்டால் எனக்கு தகவல் தெரிவிப்பர். இதற்காக ஃபைசாபாத்தில் சிறிய அறை ஒன்றில் ஈமச் சடங்குகளை செய்வதாக தெரிவித்தார்.

இறுதிச் சடங்குகள்

மற்ற சடலங்களை எரிப்பதற்கு ரூ 5 ஆயிரமும் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு ரூ 3500ம் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள இடுகாட்டில் முகமதுவின் நண்பர்கள் இருப்பதால் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய பணம் வசூலிப்பதில்லை. இதுவரை இந்து மதத்தைச் சேர்ந்த 3000 உடல்களுக்கும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த 2500 உடல்களுக்கும் ஈமச் சடங்கு செய்துள்ளார். இவரது 25 ஆண்டு கால சேவையை பாராட்டி இவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Mohammed Sharif in Ayodhya has been named for Padma Shri for cremating unclaimed bodies. He has performed last rites for 5000 more bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X