லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனாவின் பர்தா தடை கோரிக்கை அரசியலமைப்பிற்கு விரோதம்..ஷியா வக்ஃப் வாரியம் கண்டனம்

Google Oneindia Tamil News

லக்னோ: இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கைக்கு, உத்திரப்பரதேச ஷியா வக்ஃப் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் வாசிம் ரிஸ்வி, சிவசேனாவின் கோரிக்கை பொறுப்பற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என கண்டனம் தெரிவித்துள்ளார் பர்தா அணிய வேண்டுமா இல்லையா என்பது இஸ்லாமிய பெண்களின் விருப்பம் என்றார்

Shiv Senas burqa ban requested against the constitution..Shia Waqf Board condemns

பர்தா அணிய தடை என்ற உத்தரவை பிறப்பிக்க ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை நடத்த உத்தரவிடுவதை காட்டிலும் பன்மடங்கு தைரியம் வேண்டும் ஆனால் இலங்கை அதிபரோ ஒரே இரவில் பொதுஇடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்து உத்தரவிட்டு விட்டார் என கூறி இலங்கை அதிபரின் இந்த செயலை சிவசேனா வரவேற்றுள்ளது

சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்.. வான்டட்டாக வம்பிழுக்கும் கருணாஸ் சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்.. வான்டட்டாக வம்பிழுக்கும் கருணாஸ்

பர்தா அணிவதை தடை செய்ய கோருபவர்கள் பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கான வித்தியாசத்தை உணராமல் குழம்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பர்தா விவகாரத்தை பலதாரமணம், முத்தலாக் போன்று எளிதாக திருத்தி விடலாம் என நினைப்பதாக இஸ்லாமிய பெரியவர்கள் சாடியுள்ளனர்.

மேலும் இந்த நடைமுறைகளுக்கு எதிராக எந்த குரல் எழுப்பப்பட்டாலும், உடனடியாக இஸ்லாம் மதம் ஆபத்தில் உள்ளது தேசியவாதத்தை விட மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுவதாக சிவசேனா கூறியுள்ளது

சிவசேனா தற்போது கையில் எடுத்துள்ள பர்தா தடை விவகாரம், தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தே்ாதல் நடைபெற்று வரும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசேனாவின் கருத்து வாக்குப்பதிவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்

English summary
Waqf Board strongly condemned Shiv Sena's demand to ban Bharata's dressing in public places in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X