லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்த பூசாரிகள் ! | Shiv Ling at Varanasi temple wears antipollution mask

    லக்னோ: அவர் நல்லா இருந்தால்தான் நாம் நன்றாக இருப்போம் என சிவலிங்கத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் மாஸ்க் அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காற்று மாசை குறைக்க டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் வீரர்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் முகமூடி அணிந்து கொள்கின்றனர். டெல்லியில் உள்ள பாதிப்பு அண்டைய மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது.

    ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சுஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு

    வாரணாசி

    வாரணாசி

    இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு மாஸ்க் அணிவித்துள்ளனர்.

    பூஜை

    பூஜை

    அது போல் மற்ற சுவாமி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயில் பூசாரிகளும் மாஸ்க் அணிந்து கொண்டே பூஜை செய்கின்றனர்.

    நலமாக

    நலமாக

    இதுகுறித்து பூசாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் வாரணாசியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இந்த மாசான காற்றிலிருந்து சிவபெருமானை காக்கவே மாஸ்க் எனப்படும் முகமூடி அணிவித்திருக்கிறோம். அவர் நன்றாக இருந்தால்தானே நாம் நலமாக இருக்க முடியும் என்றனர்.

    திருவிழாவில் புதிய ஆடை

    திருவிழாவில் புதிய ஆடை

    அது போல் சிக்ரா பகுதியில் உல்ள சிவன் பார்வதி கோயிலில் சிவா, துர்க்கை, காளி, சாய்பாபா ஆகிய சுவாமி சிலைகளுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்குள்ள பூசாரிகளிடம் கேட்ட போது மழை காலத்தில் கம்பளி போன்ற ஆடைகளை சுவாமிகளுக்கு போர்த்துகிறோம். அது போல் திருவிழா காலங்களில் புதிய ஆடையை அணிவிக்கிறோம்.

    சுவாமி சிலைகள்

    அவ்வாறிருக்கும் போது காற்று மாசை தடுக்க ஏன் மாஸ்க் அணியக் கூடாது? வாரணாசி என்பது நம்பிக்கைக்குரிய இடமாகும். சுவாமி சிலைகள் உயிருள்ளவையாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே நாங்கள் சில கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

    English summary
    Varanasi temple priests covers mask to Shiva lingam as air pollution gets worsened.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X