லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4-வது டெஸ்ட்டிலும் கனிகாவுக்கு கொரோனா உறுதி.. சீரியஸ்னஸுக்கு மாறினார்.. பத்திரமாக இருக்க அட்வைஸ்!

கனிகா கபூருக்கு 4வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

லக்னோ: அடங்காமல் ஆட்டம் போட்டு கொண்டிருந்த கனிகாவுக்கு 4வது முறையாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதிலும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.. இதனால் அவருக்கு தொற்று இருப்பதும் மீண்டும் மீண்டும் உறுதியாகி உள்ளது.. இதையடுத்து "எல்லாரும் பத்திரமாய் இருங்க நண்பர்களே, நேரம் நமக்கு வாழ்க்கையின் மதிப்பை கற்றுக்கொடுக்கிறது" என்று கனிகா தத்துவம் நிறைந்த வார்த்தைகளை உதிர்த்துள்ளார்!

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    உபியை சேர்ந்தவர் கனிகா கபூர்... பிரபலமான பாலிவுட் பாடகி.. இவர் சமீபத்தில் லண்டனுக்கு சென்று நாடு திரும்பினார்.. லண்டனுக்கு போய்வந்ததுடன், 3 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

    இதற்கு பிறகு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். பிறகு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்கு போனபோது டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

    தொடர் புகார்கள்

    தொடர் புகார்கள்

    இதையடுத்து, கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அங்கு அவர் ஒரு நோயாளி போலவே இல்லை என்றும், ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்காமல் அட்டகாசம் செய்வதாகவும் புகார் எழுந்தது. வெளிநாடு போய் வந்ததும் இல்லாமல், வைரஸ் டெஸ்ட் பண்ணின விஷயத்தையும் வெளியே சொல்லாமல், ஆஸ்பத்திரியிலும் அடங்காமல் உள்ளதால் சோஷியல் மீடியாவில் எல்லாரும் கனிகாவை திட்டி தீர்த்தனர். கனிகாவால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால், கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் மற்றொரு புறம் குரல்கள் எழுந்தபடியே உள்ளன.

    பாசிட்டிவ்

    பாசிட்டிவ்

    சில தினங்களுக்கு முன்புகூட கனிகாவுக்கு 3வதுமுறை கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.. இதிலும் அவருக்கு பாசிடிவ் என்றே உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் கனிகாவை மொத்தமாக பீடித்துள்ளதால் தீவிர கண்காணிப்பும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4வது முறையாக டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிலும் பாசிடிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.

    அலட்சியம்

    அலட்சியம்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த பீதி நிலவி வரும் நிலையில் சூழலில் அறிகுறிகள் இருந்தும் அலட்சியமாக நடந்துகொண்ட கனிகாவின் மீது சரோஜினி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4-வது முறையாகவும் கனிகாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐஏஎன்எஸ் (Indo Asian News Service) என்ற செய்தி நிறுவனத்திற்கு அவரது உறவினர் ஒருவர் பேட்டி தந்தார்.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    அதில், "கனிகாவின் டெஸ்ட் ரிசல்ட் முடிவுகள் எங்களுக்கு ரொம்ப கவலையாக இருக்கு.. அவர் சிகிச்சைக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றே தெரிகிறது.. இந்த மாதிரி ஊரடங்கு நேரத்தில் எங்களால் அவரை போய் நேரில் பார்க்க முடியல.. உயர்தர சிகிச்சை அளிக்கவும் வாய்ப்பு இல்லாம போச்ச.. அவர் சீக்கிரமா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    நல்லா இருக்கேன்

    நல்லா இருக்கேன்

    இந்நிலையில் உடல்நிலை குறித்து கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்... அதில்,"உங்களுடன் என்னுடைய அன்பை பகிர்ந்து கொள்கிறேன்... எல்லாம் வீடுகளில் பாதுகாப்பாக இருங்க நண்பர்களே... உங்களுடைய அக்கறைக்கு நன்றி... ஆனால் நான் ஐசியூவில் இல்லை... இப்போ நான் நல்லா இருக்கேன்.. அடுத்தமுறை டெஸ்ட் எடுக்கும்போது எனக்கு நெகட்டிவ் வரும்ன்னு நம்புகிறேன்... என் வீட்டுக்கு போய் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பார்க்க நான் காத்து கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    தத்துவம்

    இதனுடன் ஒரு போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.. அதில், "வாழ்க்கை, நேரத்தை சிறப்பாக செலவிடுவது குறித்து நமக்கு கற்றுக்கொடுக்கிறது, ஆனால் நேரம் நமக்கு வாழ்க்கையின் மதிப்பை கற்றுக்கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.. 4வது முறை டெஸ்ட் ரிசல்ட் வரவும் கனிகாவின் வார்த்தைகளில் தத்துவம் நிறையவே தென்பட்டு வருகிறது!

    English summary
    bollywood famous singer kanika kapoor infected corona 4rd test also confirmed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X