லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடல் அறுந்ததால் எமனின் வாசற்படியை மிதித்த சிறுவன்.. உதவும் குணத்தால் உயிரோடு மீட்ட சோனு சூட்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனது வயிற்றில் லக்கேஜ் கொண்டு செல்லும் டிராலி விழுந்ததில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் நடிகர் சோனு சூட் செய்த மருத்துவ உதவியால் அந்த சிறுவன் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்காக நடிகருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நடிகர் சோனுசூட் கொரோனா ஊரடங்கின்போதிலிருந்தே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரன் என்ற சிறுவனின் வயிற்றின் மீது லக்கேஜ் கொண்டு செல்லும் டிராலி ஒன்று மேலிருந்து கீழே விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான்.

Recommended Video

    Sonu Sood Gifts Tractor to a Farmer Family

    இதையடுத்து அந்த சிறுவனை அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் உள்ள குடல் வெடித்து விட்டது. எனவே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர். இதையடுத்து அரசின் ஆம்புலன்ஸ் மூலம் அங்கு வந்தனர்.

    2-வது குழந்தையை கள்ளக்காதலனுக்கு பெற்ற மணிமேகலை.. கணவன் கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் கொலை2-வது குழந்தையை கள்ளக்காதலனுக்கு பெற்ற மணிமேகலை.. கணவன் கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் கொலை

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    அங்கு அந்த சிறுவனை லக்னோ கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். தந்தையிடம் பண வசதி ஏதும் இல்லாததால் சிறுவனை லக்னோவுக்கு அழைத்து செல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இந்த தகவலை கரனின் பக்கத்து வீட்டுக்காரரான ரிஷப் என்பவர் சோனு சூட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    ரிஷப்

    ரிஷப்

    இதனிடையே உள்ளூர் மக்கள் கொடுத்த சிறிய தொகை மூலம் மீண்டும் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அந்த சிறுவன். லக்னோவுக்கு அழைத்து வந்தபோதிலும் அந்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்படவில்லை. கோவிட் சோதனை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தார். சிறுவனின் நிலை குறித்து ட்வீட் போட்ட ரிஷப்பிற்கு சோனு சூட் குழுவினரிடம் இருந்து அழைப்பு வந்தது.

    தகவல்கள்

    தகவல்கள்

    அவரிடம் சிறுவனுடைய அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்ட அந்த குழுவினர் நேரடியாக லக்னோ மருத்துவமனைக்கு சென்று தங்கள் காரில் சிறுவனையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கொண்டு ராம் மோகன் லோஹியா எனும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுவனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    அப்பல்லோ மருத்துவமனை

    அப்பல்லோ மருத்துவமனை

    இதையடுத்து லக்னோவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுவன் நேற்று மாலை 4 மணிக்கு அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்த நிலையில் 7 மணிக்கு சிறுவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரர் ரிஷப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Sonusood helps a child who is in serious condition now he is out of danger after admitted in Apollo Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X