லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் தலா 38 தொகுதிகளில் போட்டி: அகிலேஷ், மாயாவதி அறிவிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கு கொண்ட சமாஜ்வாதி மற்றும் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது.

இதுதொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி செய்தியாளர்களை கூட்டாக சந்திக்கின்றனர். அப்போது பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முக்கிய அறிவிப்பு வெளியானது.

கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், இவ்விரு கட்சிகளும் தனித்து களமிறங்கியதால்தான் பாஜக உத்தர பிரதேசத்தில் அமோக வெற்றி பெற முடிந்தது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இப்போது இவ்விரு கட்சிகளும் இணைந்து களமிறங்குவதால் பாஜகவிற்கு நெருக்கடி காத்திருக்கிறது.

SP-BSP to announce alliance in joint press meet - Live updates

Newest First Oldest First
1:54 PM, 12 Jan

பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணிக்கு ம.பி. முதல்வர் கமல்நாத் வரவேற்பு

2014 லோக்சபா தேர்தலில் பாஜக 31% வாக்குகள்தான் பெற்றது- கமல்நாத்

நாடு முழுக்க பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயம்- கமல்நாத்

1:54 PM, 12 Jan

பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகம்

உத்தரபிரதேச நகரங்களில் இரு கட்சி தொண்டர்களும் கொண்டாட்டம்

12:49 PM, 12 Jan

லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி தலா 38 இடங்களில் போட்டி

காங்கிரஸ் கட்சிக்கு ரேபரேலி, அமேதி தொகுதிகள் மட்டும் காங்கிரசுக்கு

12:23 PM, 12 Jan

எங்களின் இந்த பிரஸ் மீட் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு உறக்கத்தை தொலைக்கும்-மாயாவதி

விருந்தினர் மாளிகை கசப்பு சம்பவத்தை மறந்து பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்துள்ளோம்

12:14 PM, 12 Jan

செய்தியாளர்கள் மத்தியில் மாயாவதி பேட்டி

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக சமாஜ்வாதியுடன், பகுஜன் சமாஜ் கூட்டணி

கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மாயாவதி

12:13 PM, 12 Jan

செய்தியாளர்களை சந்திக்க வருகை தந்தனர் அகிலேஷ் யாதவ், மாயாவதி
11:24 AM, 12 Jan

லோக்சபா தேர்தலுக்காக, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி உறுதியானது

அகிலேஷ் யாதவ்- மாயாவதி இருவரும் இணைந்து சற்று நேரத்தில் செய்தியாளர் சந்திப்பு

English summary
The Samajwadi Party and the Bahujan Samaj Party are likely to announce to formalise the alliance for the 2019 Lok Sabha elections today. BSP supremo, Mayawati and chief of the SP, Akhilesh Yadav are set to address a joint press conference today, following which the alliance will be formalised. Here is the live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X