லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி.யில் யோகியின் ராம ராஜ்ஜியம் இதுதான்.. கடுமையாக சாடிய அகிலேஷ் யாதவ்

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலின் 'பூமி பூஜை' பணி தொடங்க உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்யா நாத் நடத்தி வரும் ராம ராஜ்ஜியம் (ஆட்சி) மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளால் நாட்டின் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி நம்பிக்கையற்றவர்களாகி வருகிறார்கள் என்றார்.

ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் 'பூமி பூஜை' பணி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். பல்வேறு தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யா நாத் நடத்தி வரும் ராம ராஜ்ஜியம் (ஆட்சி) மோசமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசையும் உத்தரப்பிரதேச மாநில அரசையும் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடி உள்ளார்.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதிகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி

நம்பிக்கை இழப்பு

நம்பிக்கை இழப்பு

அவர் ஞாயிறு மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: முதல்வர் யோகி ஆதித்யநாத் எப்போதும் ராம ராஜ்ஜியம் பற்றி பேசுகிறார் ஆனால் உண்மையில், ஜங்கிள் ராஜ் விட மாநிலத்தின் நிலைமை மோசமானது. அதிகாரத்தில் இருப்பவர்களே அனைவரும் ஒருவருக்கொருவர் திருடர்கள் என்று சொல்கிறார்கள். பாஜக அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளால் நாட்டின் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி நம்பிக்கையற்றவர்களாகி வருகிறார்கள்

வேலை இல்லை

வேலை இல்லை

கொரோனா காலத்தில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பானவையாக இல்லை. நாட்டில் வணிகமும் நடைபெறவில்லை. வேலைவாய்ப்பும் இல்லை. பொருளாதாரம் மோசமாக சரிந்துள்ளது.. வங்கிகள் கடனில் மூழ்கி வருகின்றன, வைப்புத்தொகை மீதான வட்டி குறைந்து வருகிறது. துன்பகரமான நிலையில் இருக்கும் மக்கள் தங்கள் பி.எஃப்-ல் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். கூலி தொழிலாளர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்த போது தங்களுக்கு நெருக்கமான பலரை இழந்துவிட்டனர். பாஜக அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக, பொதுமக்கள் நம்பிக்கையற்றவர்களாக மாறி வருகின்றனர்.

எம்எல்ஏ கடத்தல்

எம்எல்ஏ கடத்தல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உண்மையில் நிலைமை மோசமாகிவிட்டது. கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் அதிகரித்துவிடடது. பாஜக எம்எல்ஏ 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தியதாக தகவல்கள் வந்துள்ளன. கடத்தலில மாவட்ட அமைச்சரின் பெயர் எதிரொலிக்கிறது, பாஜகவினர் ஒழுக்ககேடான தொழிலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதான் அந்த கட்சியை பற்றி ஒரு உதாரணம்.

வெண்டிலேட்டர் ஊழல்

வெண்டிலேட்டர் ஊழல்

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் ஊழல் மிக்கவர்கள் என்று அழைப்பது எவ்வளவு விந்தையானது. வெண்டிலேட்டருக்கு கொடுக்கப்பட்ட பணம் மறைந்துவிட்டது என்று ஹார்டோய் எம்.பி கூறுகிறார். பாஜக எம்.எல்.ஏ.வை நில அபகரிப்பில் ஈடுபட்ட மக்களின் கூட்டாளி என்று உன்னாவோவில் உள்ள காவல்துறை வர்ணித்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள் பாஜக ஆட்சியில் வலுவாக இருக்கிறார்கள்.. லக்னோவின் தலைமை பொறியாளரை மாநகராட்சி ஒப்பந்தக்காரர் அச்சுறுத்துகிறார்.

சம்பளம் இல்லை

சம்பளம் இல்லை

பாஜகவின் ‘மக்கள் விரோத' கொள்கைகளால் மக்கள் வருத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு பாஜகவுக்கு எந்த திட்டமும் இல்லை .இப்போது நிலைமை என்னவென்றால், பண்டிகை சந்தர்ப்பத்தில் கூட மாநில அரசால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. உத்தரபிரதேச மாநில ஊழியர் நலக் கழகத்தின் ஊழியர்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் கிடைக்கவில்லை. ஜல் நிகாம் மற்றும் சி அண்ட் டி.எஸ்ஸில், 20 ஆயிரம் ஊழியர்கள் நான்கு மாதங்களாக சம்பளம் பெறவில்லை, " இவ்வாறு அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்

English summary
Samajwadi Party President and former UP Chief Minister Akhilesh Yadav has said that Chief Minister Yogi Adityanath always talks about Ramraj, but in reality, the situation in the state is worse than Jungle Raj. All those in power are telling each other as thieves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X