லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிக்கூடத்தில் மாடுகள்… தெருவில் திரியும் மாணவர்கள்.. உ.பி.யில் இதென்ன கூத்து

Google Oneindia Tamil News

லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை பள்ளிக் கூடத்தில் கட்டி வைத்துள்ளதால், மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கல்விச்சாலைகள் தந்த ஏழைத் தலைவனை தினமும் நினையுங்கள் என்ற வரிகள் கொண்ட திரைப்பட பாட்டு ஒன்று. மனிதனை மனிதாக்க உதவுவது கல்வி என்பதால்... அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசே பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Students in uttarpradesh school complain after bovines roam around in campus

ஆனால்... உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் கூத்தால்... பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ... இல்லையோ.. மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், மாடுகள் சித்ரவதை செய்வதை தடுக்க பல புதுப்புது ஐடியாக்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை அரசு மருத்துவமனைகளில், பள்ளிக்கூட வளாகத்தில் கட்டி வைக்கும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.

பண்டா என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அனாதையாக சுற்றித்திரிந்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பயில வேண்டிய மாணவர்கள் தெருவிலும்... தெருவில் திரிய வேண்டிய மாடுகள் பள்ளிக் கூடத்திலும் உள்ளன. இதை பார்க்கும் போது அடக் கொடுமையே.. என்று தான் நினைக்க தோன்றுகிறது.

English summary
In uttarpradesh state, Students of Bisanda's Singhpur Mafi middle school say studies affected as cows have been tied in campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X