லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினரே கிடையாது.. பாஜக அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினர் கிடையாது என .உத்தரப்பிரதேச பாஜக செய்திதொடர்பாளர் ஹரிஸ்ஷ்சந்த்ரா ஸ்ரீவஷ்தவா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு ஆசிரமங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருபவர் சின்மயானந்தா.

இவர் 1999ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர் ஆவார். உத்தரப்பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

மாணவி பாலியல் புகார்

மாணவி பாலியல் புகார்

அம்மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக விளங்கி வரும் சின்மயனந்தா மீது அவருக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிறப்பு குழு விசாரணை

சிறப்பு குழு விசாரணை

தன்னை சின்மயானந்தா பலவந்தமாக அடைத்து வந்து இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இது தொடர்பான வீடியா வைரலான நிலையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு குழு விசாரித்து வருகிறது.

சட்டக்கல்லூரி மாணவியும் கைது

சட்டக்கல்லூரி மாணவியும் கைது

இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டார். அதேநேரம் சட்டக்கல்லூரி மாணவியும் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சின்மயனாந்தாவை பணம் கேட்டு மிரட்டும் நோக்கில் புகார் அளித்ததாக கைது செய்துள்ளனர்.

உபி பாஜக அறிவிப்பு

உபி பாஜக அறிவிப்பு

இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச பாஜக செய்திதொடர்பாளர் ஹரிஸ்ஷ்சந்த்ரா ஸ்ரீவஷ்தவா கூறுகையில், சுவாமி சின்மயானந்தா இனி பாஜகவின் உறுப்பினரே கிடையாது. கட்சியின் எல்லா ஆணவங்களும் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. பாஜகவில் இல்லாத போது அவரை பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றார்.

பாஜகவில் இருந்து நீக்கம்

பாஜகவில் இருந்து நீக்கம்

சின்மயானந்தா பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய நிலையில் அவரால் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், அவரை கட்சியின் உறுப்பினரே கிடையாது என்று சொல்லி பாஜக விலக்கி வைத்துள்ளது.

English summary
U.P. spokesperson Harishchandra Srivastava said Chinmayanand no longer a BJP member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X