லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நேரத்தில் உ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்... மர்ம கடிதத்தால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் நேரத்தில் தாக்குதல்.. மர்ம கடிதத்தால் பரபரப்பு- வீடியோ

    லக்னோ: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். இதனால் வாரணாசியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாமிளி மற்றும் ரூர்கி ரயில்நிலையங்களுக்கு இரண்டு மர்ம கடிதங்கள் வந்துள்ளன. இதில் உத்தரபிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், ரயில்நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குந்றம்.. பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. திமுக வேட்பாளர் சரவணன் திருப்பரங்குந்றம்.. பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. திமுக வேட்பாளர் சரவணன்

    ராமர் கோவிலுக்கு குறி

    ராமர் கோவிலுக்கு குறி

    இந்த கடிதம் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கமாண்டரிடம் இருந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள விஷ்வநாத் கோயில், ராமர் கோயில் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    தீவிரவாதிகள் சதி திட்டம்

    தீவிரவாதிகள் சதி திட்டம்

    இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை கொல்லவும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து உத்தரபிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    பாதுகாப்பு அதிகரிப்பு

    பாகிஸ்தானுக்குள் நுழைந்த தாக்குதல் நடத்திய இந்தியாவிற்கு, பதிலடி கொடுப்பதற்காக, தேர்தல் நேரத்தை குறி வைத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. அதுவும், மோடி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் மழுப்பல்

    பாகிஸ்தான் மழுப்பல்

    இதனிடையே பாகிஸ்தானில் தலைமறைவாகவுள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், முக்கிய தீவிரவாதிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. மசூத் அசார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஆனால், மசூத் அசார் உடல் நலத்துடன் இருப்பதாகவும், கடந்த 17 ஆண்டுகளாக மருத்துவமனைக்கே சென்றதில்லை அவரே கூறியதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு, மசூத் அசாரின் உடல்நலம் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், தீவிரவாத தாக்குதலுக்கு, 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Following the Pulwama attack, the Jaish-e-Mohammed target UP state at election time
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X