லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலி.. பஜ்ரங்கி பலியால் வந்த பிரச்சனை.. யோகி, மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. இதுதான் காரணம்!

லோக்சபா தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கும், மாயாவதிக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை- வீடியோ

    லக்னோ: லோக்சபா தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கும், மாயாவதிக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த மூன்று நாட்களுக்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அடுத்த இரண்டு நாட்களுக்கும் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. நாளை காலை 6 மணியில் இருந்து இந்த தடை அமலாகிறது.

    இது இரண்டு கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தடைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

    யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவுயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    கடந்த வாரம் முன் மாயாவதி பிரச்சாரம் செய்த போது, இஸ்லாமியர்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார். இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறக்கூடாது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிதான் உங்களுக்கு நல்லது செய்யும் என்று குறிப்பிட்டார்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் '' பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி இந்துக்கள் பக்கம் நிற்கவில்லை. அவர்கள் அலிகளின் (இஸ்லாமியர்கள்) பக்கம் நிற்கிறார்கள். நாம் பஜ்ரங்கி பலி (அனுமான்) பக்கம் நிற்கிறோம். நீங்களே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள், என்றார்.

    இதுதான் சர்ச்சை

    இதுதான் சர்ச்சை

    இதற்கு பதில் சொன்ன மாயாவதி, யோகி ஆதித்யநாத் மக்கள் மத்தியில் பிரிவை உண்டாக்க நினைக்கிறார். நான் மக்கள் பக்கம் இருக்கிறேன். எங்களுக்கு அலிகளும் வேண்டும். பஜ்ரங்கி பலிகளும் வேண்டும். எங்களுக்கு இருவருமே முக்கியம்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன தடை

    என்ன தடை

    இதற்கு எதிராகத்தான் தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்து மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை இவர்கள் தவறாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கூறித்தான் தற்போதைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    The real reason behind why ECI banned Yogi and Mayawati from campaigning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X