லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

0+0 = பிரியங்கா காந்தி… சர்ச்சையை ஏற்படுத்திய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Yogi Adityanath slams priyanka | சர்ச்சையை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத்தின் பேச்சு

    லக்னோ: பிரியங்காவின் வரவால்... ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அக்கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அரசியல் வருகை.. பற்றி யார் கருத்து சொல்கிறார்களோ... இல்லையோ பாஜக தினம் ஏதேனும் ஒரு கருத்தை கூறி வருகிறது.

    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

    மோடி தொகுதியில் பிரியங்கா?

    மோடி தொகுதியில் பிரியங்கா?

    குறிப்பாக பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் அவருக்கு எதிராகவே பிரியங்கா வத்ராவை நிறுத்தவேண்டும் என்று உ.பி.காங்கிரசார் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரும் அங்குதான் வருகிறது.

    கிண்டலடுத்த யோகி

    கிண்டலடுத்த யோகி

    இதையடுத்து... மற்ற தலைவர்களை போல முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக கிண்டலடித்துள்ளார். பிரியங்காவின் நேரடி அரசியல் நுழைவு குறித்து அவர் கூறியதாவது: பிரியங்கா நுழைவு எங்கும் கொண்டு போகாது.

    பிரியங்கா ஒரு ஜீரோ

    பிரியங்கா ஒரு ஜீரோ

    பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே வரும். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஜீரோ.. அதில் யார் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது. அதிலிருந்து ஒன்றும் வராது.

    பட்டியலில் வந்த யோகி

    பட்டியலில் வந்த யோகி

    முன்னதாக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பீகார் அமைச்சர் விநோத் நாராயணன் ஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது. அவர்களை தொடர்ந்து யோகி ஆதித்யநாதின் கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

    English summary
    The result of zero plus zero always remains zero says uttarpradesh chief minister yogi adityanath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X