லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்!

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

அந்த மூன்று நாள் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வருகிறது. முழுக்க முழுக்க கங்கையில் பிரச்சாரம் செய்த உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வருகிறது.

கடைசி நாளான இன்று அவர் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அவர் வாரணாசியில் இன்று என்ன பேசுவார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சசிகலாவின் திட்டம் விவேக்.. தினகரன் மனதில் அனுராதா.. தேனியில் நிற்கப் போவது யார்?சசிகலாவின் திட்டம் விவேக்.. தினகரன் மனதில் அனுராதா.. தேனியில் நிற்கப் போவது யார்?

மூன்று நாள் முன்

மூன்று நாள் முன்

பிரியங்கா காந்தி நேற்று முதல்நாள் இந்த உத்தர பிரதேச பிரச்சாரத்தை தொடங்கினார். கங்கை நதியில் பூஜை செய்து, வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்பின் பிரயாகராஜில் (அலஹாபாத்) இருந்து கப்பலில் வரிசையாக பல இடங்களில் படகு மூலமே சென்றார்.

வழிபாடு

வழிபாடு

இந்த மூன்று நாட்களில் பிரியங்கா காந்தி பல கோவில்களில் வழிபாடு நடத்தினார். கங்கை நதியில் பயணம் செய்த இவர் கரைகளில் இறங்கி வந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். உத்தர பிரதேசத்தில் இருக்கும் முக்கிய வழிபாட்டு தளங்களில் எல்லாம் சென்று வழிபாடு நடத்தினார்.

மக்களிடம் பேசினார்

மக்களிடம் பேசினார்

அதேபோல் பல்லாயிரக்கணக்கான மக்களிடமும் இவர் பேசினார். முக்கியமாக பெண்களிடம் அதிகம் பேசினார். ஆனால் மேடை போட்டு எங்கும் பிரச்சார கூட்டங்களை நடத்தவில்லை. முக்கியமாக மீனவ மக்கள், கங்கையை நம்பி இருக்கும் மக்கள், தலித் மக்களிடம் இவர் அதிகம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வாரணாசி

இன்று வாரணாசி

இந்த நிலையில் இன்று பிரியங்கா காந்தி வாரணாசி வர இருக்கிறார். பிரியங்காவின் 145 கிமீ தூர கங்கை படகு பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. வாரணாசியில் கோவில்களில் சென்று வழிபடும் இவர் பெரிய பிரச்சார கூட்டத்தை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three days Ganga gets over today: Congres Gen Sec. Priyanka Gandhi to visit PM Modi’s constituency Varanasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X