லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோமதி ஆற்றங்கரையில் குவியல் குவியலாக சடலங்கள் எரிப்பு.. புகைப்படம் எடுப்பதை தடுக்க தகரம் அடித்த அரசு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கோமதி ஆற்றின் கரையில் ஏராளமான சடலங்கள் எரிக்கப்படுவதை வீடியோ, புகைப்படங்கள் எடுக்க முடியாத வகையில் தகரங்களை அடித்து மறைக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் 2ஆவது அலை இந்தியா முழுவதும் பெருகி வருகிறது. வடமாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா

கொரோனா

இந்த நிலையில் லக்னோ மாநகராட்சி கழகத்திற்குள்பட்ட பகுதிகளில் கொரோனாவாலும் இதர பிற காரணங்களாலும் உயிரிழப்புகளின் உடல்களை எரியூட்ட இடமின்றி வரிசையில் காக்க வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பைகுந்த் தாம் இடுகாட்டில் பணியாற்றும் முன்னா என்பவர் கூறுகையில் புதன்கிழமை கொரோனாவால் 14 பேர் உயிழந்ததாக கூறப்பட்டது.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

ஆனால் அன்றைய தினம் 46 பேரை எரித்தேன். நான் 6 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். இதுவரை ஒரே நாளில் இத்தனை சடலங்கள் வந்ததில்லை. அது போல் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 124 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா காட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டன. இதில் 276 மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை என்றார்.

தீ சுவாலைகள்

தீ சுவாலைகள்

அது போல் கோமதி ஆற்றங்கரையில் உள்ள பைன்சாகுந்த் இடுகாட்டிலும் நேற்றைய தினம் ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டன. இதனால் ஆங்காங்கே தீ சுவாலைகள் பற்றி போல் எரிந்து கொண்டிருந்தன. இத்தனை சடலங்களை ஒரே நேரத்தில் எரிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

வீடியோ வைரல்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற அவலநிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து அந்த பைன்சாகுந்த் இடுகாட்டில் பிணங்கள் எரிப்பதை யாரும் பார்த்திராமல் இருப்பதற்காக தகரங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

English summary
Tin Sheets are being set up as cover to prevent seeing of deadbodies burnt in Lucknow at Bhainsakund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X