லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 200 ரூபாய் சம்பளம்.. அதுவும் வேணும்னா.. படுக்கையை பகிருமாறு மிரட்டப்படும் சிறுமிகள்.. ஷாக்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புந்தல்கண்ட் பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்களில் பணியாற்றும் பழங்குடியின ஏழை சிறுமிகளுக்கு சம்பளம் தர மறுக்கும் முதலாளிகள்.. சம்பளம் வேண்டுமென்றால் அந்த சிறுமிகள் தங்களுடன் படுக்கையைப் பகிருமாறு கட்டாயப்படுத்தும் அக்கிரமச் செயல் அம்பலமாகி அதிர வைத்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் வறுமை என்பது சித்ரவதையின் மோசமான வடிவம் ஆகும். வறுமையில் வாழ்வது ஒரு சாபக் கேடாகும். தங்கள் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அந்த ஏழை மக்கள் கடினமாக உழைப்பது மட்டும் போதாது. சொற்ப உணவுக்காகவும் கொஞ்சம் பணத்திற்காகவும் செல்வந்தவர்கள் இளம் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கும் தயங்குவதில்லை.

ஆம், உத்தரப்பிரதேச மாநிலம், புந்தல்கண்ட் பகுதியில் உள்ளது சித்ரகூட். இது தலைநகர் லக்னோவிலிருந்து 700 கி.மீ. தூரம் ஆகும். இங்கு சட்டவிரோத சுரங்கங்கள் ஏராளமாக உள்ளன.

பழங்குடியினம்

பழங்குடியினம்

லாக்டவுனால் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பழங்குடியினத்தை சேர்ந்த சிறுமிகள் அங்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் ரூ 150 முதல் ரூ 200 வரை கூலி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூலியை ஒப்பந்ததாரர்களும் இடைத்தரகர்களும் எளிதாக வழங்குவதில்லை. இதனால் அந்த சிறுமிகள் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஒப்பந்ததாரர்கள்

ஒப்பந்ததாரர்கள்

இந்த சிறுமிகள் 12 வயது முதல் 14 வயதுடையவர்களாவர். இதுகுறித்து கார்வி கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில் நாங்கள் சுரங்க பணிக்காக செல்லும் போது நாங்கள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே எங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் பணியை வழங்குகிறார்கள். அவர்களது உண்மையான பெயரையும் அந்த ஒப்பந்ததாரர்கள் எங்களிடம் கூற மாட்டார்கள்.

மலை

மலை

வேலை வேண்டுமானால் இதை செய்ய வேண்டும் என அவர்கள் எங்களை மிரட்டுவார்கள். பணம் நிறைய கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறுவர். சில நேரங்களில் ஒருவருக்கு மேல் இந்த அத்துமீறலில் ஈடுபடுவர். அவர்கள் கேட்பதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் எங்களை மலையிலிருந்து வீசிவிடுவதாக மிரட்டுவர் என்றார். வேலை வேண்டுமானால் இதை செய்ய வேண்டும் என அவர்கள் எங்களை மிரட்டுவார்கள். பணம் நிறைய கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறுவர். சில நேரங்களில் ஒருவருக்கு மேல் இந்த அத்துமீறலில் ஈடுபடுவர். அவர்கள் கேட்பதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் எங்களை மலையிலிருந்து வீசிவிடுவதாக மிரட்டுவர் என்றார்.

தினக்கூலி

தினக்கூலி

இந்த பாலியல் அத்துமீறல் சிறுமிகளின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்கு யாரும் உதவுவதில்லை. குடும்பத்தில் உணவுக்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. இதுகுறித்து ஒரு சிறுமியின் தாய் கூறுகையில் சிறுமிகளை வேலைக்கு அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் ரூ 300 முதல் ரூ 400 வரை தினமும் வழங்குவதாக கூறி அழைத்து செல்வர்.

200 ரூபாய்

200 ரூபாய்

ஆனால் சில நேரங்களில் 150 , சில நேரங்களில் ரூ 200 மட்டுமே கொடுப்பர். வேலையிலிருந்து வீடு வரும் எங்கள் பெண் குழந்தைகள் அங்கு நடப்பதை கூறுவர். ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும். நாங்கள் தொழிலாளிகள். குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும். எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம் என்றார்.

ஒருவர் பின்னர் ஒருவர்

ஒருவர் பின்னர் ஒருவர்

இதுகுறித்து மற்றொரு சிறுமி கூறுகையில் சுரங்கத்திற்கு அருகே மலைக்கு பின்புறத்தில் சில படுக்கைகளை அந்த ஒப்பந்ததாரர்கள் போட்டுள்ளார்கள். எங்களை அங்கே அழைத்து செல்வார்கள். எங்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறுவார்கள். வரிசையில் நிற்போம், ஒவ்வொருவராக செல்ல வேண்டும். நாங்கள் முரண்டுபிடித்தால் எங்களை அடிப்பார்கள்.

வளையல்கள்

வளையல்கள்

வலித்தால் தாங்கிக் கொள்ள வேண்டும். இதை தவிர வேறு என்ன செய்வது, இந்த சம்பவங்களை எண்ணி நாங்கள் செத்துவிடலாம் என்று கூட நினைப்போம். நாங்கள் மேக்கப் போடாமல் சுரங்கத்திற்கு சென்றால் கொடுக்கும் ஊதியத்தில் என்ன செய்கிறீர்கள், எங்கு செலவு செய்கிறீர்கள் என அந்த ஒப்பந்ததாரர்கள் கேட்பார்கள். இதனால் நாங்கள் சந்தைக்கு சென்று வளையல்களை வாங்கி அணிந்து கொள்வோம் என்றார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்ற நிலையில் அவர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். எங்களுக்கு ஏதேனும் புகார்கள் வந்தால் அதுகுறித்து விசாரணை நடத்துவோம் என்றார். இது போல் சிறுமிகளிடம் அத்துமீறி அக்கிரமம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

English summary
Uttar Pradesh Tribal minor girls are forced to trade their bodies for Rs. 150 -200 daily during coronavirus lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X