லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமாங்க, நான் இன்னும் டிகிரி முடிக்கல.. உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இரானி

Google Oneindia Tamil News

Recommended Video

    Smriti Irani: நான் இன்னும் டிகிரி முடிக்கல.. உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இரானி- வீடியோ

    லக்னோ: அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதில், தான் இன்னும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

    2014ம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை வழியாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார் ஸ்மிருதி இராணி.

    அவர் 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்ய வேட்புமனுவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டு பிகாம் முதல் பாகம் படித்துள்ளதாக கூறியிருந்தார்.

    இந்தியா முன்னேறி இருப்பதற்கு காரணம்... காங்கிரஸ் தான்... கே.எஸ். அழகிரி பெருமிதம்இந்தியா முன்னேறி இருப்பதற்கு காரணம்... காங்கிரஸ் தான்... கே.எஸ். அழகிரி பெருமிதம்

    டிகிரி படிப்பு

    டிகிரி படிப்பு

    ஆனால் அதற்கு முன்பு 2004ம் ஆண்டு டெல்லி சாந்தினி சௌக் தேர்தலில் பிஏ பட்டப்படிப்பினை 1996ம் ஆணடு முடித்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் இதில் எதுவுமே உண்மை இல்லை என்றும் அவர் பிளஸ் 2 தான் படித்துள்ளார் என்றும் 2014ம் ஆண்டு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    டெல்லி ஐகோர்ட்

    டெல்லி ஐகோர்ட்

    ஸ்மிருதி இராணி படிப்பு விவகாரத்தில் மாற்றி மாற்றி தெரிவித்த தகவலை குறிப்பிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அகமது கான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவையில்லாமல் ஸ்மிருதி இரானியை துன்புறுத்தும் நோக்கில் வழக்கு போட்டிருப்பதாக கூறி தள்ளுபடி செய்தார்.

    ராகுல் விமர்சனம்

    ராகுல் விமர்சனம்

    பொய் டிகிரி வாங்கிய அமைச்சர்களை கொண்ட கட்சி பாஜக என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நவம்வர் மாதம் ஸ்மிருதி இரானியை மறைமுகமாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

    டிகிரி முடிக்கவில்லை

    டிகிரி முடிக்கவில்லை

    இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி அண்மையில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதில் 1991ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்துவிட்டு, 1993ம்ஆண்டு பிளஸ் 2 முடித்ததாக கூறியுள்ளார். மேலும் 1996ம் ஆண்டுதான் டெல்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாக பிகாம் முதல் பாகம் படிக்க விண்ணப்பித்ததாகவும், இதுவரை 3வருட டிகிரியை முடிக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு ரூ.4.71 கோடி சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுதாக்கலின்போது ஸ்மிருது இரானி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Union Minister Smriti Irani, who is contesting as a BJP candidate ins Amethi against Rahul Gandhi, on Declares College Degree "Not Completed" till now, In Poll Affidavit
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X