லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னவ் வழக்கில் 2வது கொலையாளி மைனர் அல்ல.. மாஸ்டர் விஜய் போல் கண்டறிந்த போலீஸ்!.. மெத்தடுதான் வேறு!

Google Oneindia Tamil News

லக்னோ: உன்னவ் மாவட்டத்தில் இரு தலித்துகள் உயிரிழந்த வழக்கில் சிறுவன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி சிறுவன் இல்லை என்றும் அவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Recommended Video

    காதலை ஏற்காததால் விபரீதம்… 2 சிறுமிகள் விஷம் வைத்து கொலை!

    உன்னவ் மாவட்டம்- பாலியல் பலாத்காரத்திற்கு பஞ்சமில்லாத மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் (வயது 16, 15,14) கடந்த புதன்கிழமை வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர்.

    கால்நடைகளுக்கு உணவளிக்க வந்த இவர்கள் இப்படி வாயில் நுரை தள்ளியபடி இருப்பதை கண்டு அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இரு சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை

    இரு சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை

    எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளது. இவருக்கு கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

    விஷம் குடித்த மூவர்

    விஷம் குடித்த மூவர்

    அவர்களது உடலில் எந்த காயங்களும் இல்லை என்பதும் மூவரும் விஷம் குடித்திருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையும் மருத்துவ அறிக்கையும் வெளிவந்தன. இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன், வினய் என்ற இளைஞர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    தொல்லை

    தொல்லை

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வினய் என்பவர் வயல்வெளிக்கு சென்று அந்த 3 சிறுமிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளார். மேலும் அந்த 3 பேரில் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அந்த சிறுமி ஏற்கவில்லையாம். அந்த சிறுமியின் போன் நம்பர் கொடுக்குமாறு வினய் அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

    பூச்சிக்கொல்லி

    பூச்சிக்கொல்லி

    ஆனால் அவர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினய், காதலித்த சிறுமி தண்ணீர் கேட்டபோது அதில் பூச்சிகொல்லியை கலந்து கொண்டு வந்து கொடுத்துள்ளார். இந்த விஷம் கலந்த தண்ணீரை சிறுமி கொடுத்ததோடு அவருடன் இருந்த மற்ற சிறுமிகளும் குடித்துள்ளனர். இதனால்தான் அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்து பின்னர் அவர்களில் இருவர் பலியாகிவிட்டனர். வினய் காதலித்த சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

    ஆதார் கார்டு

    ஆதார் கார்டு

    இந்த சம்பவத்தில் வினய்யுடன் கைதான சிறுவன் மைனர் அல்ல என்றும் அவர் இளைஞர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் சிறுவன் என கூறி கொள்ளும் நபரின் ஆதார் கார்டை சரி பார்த்த போது அவருக்கு 18 வயதுக்கு மேல் இருந்தது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் இளைஞர்கள் என்றே போலீஸார் தெரிவித்தனர்.

    English summary
    Unnao poisoning case: Second accused is not a minor? police found through Aadhar Card.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X