லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக எம்.எல்.ஏ. மீதான பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் நிவாரணம் தர உத்தரவு!

உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: உன்னாவ் பாலியல் வன்புணர்வு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். தன்னை வண்புணர்வு செய்து கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வந்தது. யாரும் நினைக்காத அளவிற்கு படத்தில் நடப்பது போல கொடுமையான விஷயங்களும் இதில் நடந்து வந்தது.

இறந்தனர்

இறந்தனர்

முதல் அதிர்ச்சியாக அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அப்போதே எம்.எல்.ஏ குல்தீப் மீது பலருக்கும் சந்தேகம் வந்தது. ஆனால் இதற்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று போலீஸ் தீர்க்கமாக மறுத்தது.

தொடர்ந்து நிகழ்ந்தது

தொடர்ந்து நிகழ்ந்தது

அதேபோல் சில நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். அந்த உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெல்லிக்கு மாற்றம்

டெல்லிக்கு மாற்றம்

இப்படி வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் தற்போது உன்னாவ் கொடூரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு, 45 நாட்களில் இதில் தீர்ப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதேபோல் பாலியல் வன்புணர்வு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உன்னாவ் பெண், தாயார், வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பெண்ணின் வழக்கறிஞர் ஏற்கனவே பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Unnao rape case: CJI says UP government to pay Rs 25 lakh as interim compensation to the victim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X