லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்!

உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் இரண்டு முறை துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் இரண்டு முறை துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இரண்டு முறையும் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும் அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் உத்தரபிரதேசத்தை மட்டுமில்லாமல், மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதில் தொடர்ந்து உத்தர பிரதேச மாநில அரசு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.

2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது.

முன்னேற்றம் இல்லை

முன்னேற்றம் இல்லை

ஆனால் இந்த வழக்கில் இதுவரை முறைப்படியே கஸ்டடியில் எடுத்து யாரும் விசாரிக்கப்படவில்லை. இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

என்ன மரணம்

என்ன மரணம்

வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் வரிசையாக மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். அந்த உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் புதிய சர்ச்சையாக வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் இரண்டு முறை துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்து இருந்த விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.

கொடுக்கவில்லை

கொடுக்கவில்லை

முதல்முறை 2018ல் லைசன்ஸ் கேட்டுள்ளார். அதன்பின் சென்ற ஜூலை 18ல் லைசன்ஸ் கேட்டுள்ளார். என்னை குற்றஞ்சாட்டப்பட்ட எம்எல்ஏ குல்தீப் தரப்பு கொள்ள பார்க்கிறது என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரண்டு முறையும் அவரின் விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இவர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறியும் கூட, அது தொடர்பாக அம்மாநில அரசு கொஞ்சம் கூட கவலை கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Unnao rape survivor lawyer asked for gun license two times: UP Govt refused both times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X