லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Unno Rape Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி.. கேள்விகளால் ஆடிப்போன போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Unno Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி-வீடியோ

    லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த இளம் பள்ளி சிறுமி ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டுஇருக்கிறது. சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்த சிறுமி போலீஸை கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் பராபங்கியில் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அப்போது மாணவ மாணவிகளுக்கு அறிவுரை போலீசார் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி உன்னாவ் பாலியல் பலாத்காரம் குறித்து மிக ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    அரசியல்வாதிகள் என்றால்

    > "ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிறுமியை பலாத்காரம் செய்தார். பின்னர் அவரது தந்தை விபத்தில் இறந்துவிட்டதாக கூறியதை நாங்கள் கண்டோம். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் கார் மீது லாரி மோதியது. அந்த லாரியின் நம்பர் பிளேட் கருப்பு மையால் மாற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் சாமானியர்கள் குற்றவாளிகள் என்றால் எதிர்ப்பு தெரிவித்து போராடலாம். ஆனால் குற்றவாளிகள் அரசியல்வாதி அல்லது பெருந்தலைகள் என்றால் அவர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி போராடுவது? அப்படியே போராடினால் நீதி கிடைக்குமா?

    மாணவர்கள் கரவொலி

    மாணவர்கள் கரவொலி

    அப்படியும் மீறி நாங்கள் போராட்டம் நடத்தினால் எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அது உண்மையான நடவடிக்கையாக இருக்காது." இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தார். அப்போது சுற்றி இருந்த மாணவர்கள் கரவொலி எழுப்பி கைதட்டிக்கொண்டே இருந்ததால் பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் பேசினார்.

    என்ன உத்தரவாதம்

    என்ன உத்தரவாதம்

    நாங்கள் உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினாலும் கூட நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாங்கள் எங்களை குரலை உயர்த்தி பிரச்சனைகளை வெளியில் சொன்னால் பாதுப்பாகஇருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    உதவிகளை வழங்குவோம்

    உதவிகளை வழங்குவோம்

    இந்த சிறுமி பேசும் வீடியோ தான் தற்போது மொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பராபங்கி டிஎஸ்பி ஆர்எஸ் கௌதம் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கற்பனையாக இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? தனிப்பட்ட முறையில் அவளைப் பாதிக்கும் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் நாங்கள் எல்லா உதவிகளையும் வழங்குவோம் என்று அவளிடம் சொன்னோம்" என்றார்.

    English summary
    UP school girl ask Sharp question to police over unnao rape survivors accident
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X