லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-12-2019 | Morning News | oneindia tamil

    லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தில் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    அவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    ஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்ஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்

    ரயில் நிலையம்

    ரயில் நிலையம்

    இதையடுத்து கடந்த மார்ச்சில் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் திரிவேதி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சிவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ரே பரேலி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்துக்கு சென்றார்.

    தீ வைத்து கொளுத்திய கொடூரம்

    தீ வைத்து கொளுத்திய கொடூரம்

    அப்போது சிவம், தலைமறைவாக இருந்த சுபம் ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் நிலையம் அருகேயே அந்த பெண்ணை கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதையடுத்து பயங்கர தீக்காயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்டார்.

    90 சதவீத தீக்காயம்

    90 சதவீத தீக்காயம்

    சிவம், சுபம் உள்பட 5 பேர் தன்னை கடுமையாக தாக்கி எரித்ததாக அந்த பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிவம், சுபம் உள்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டது.

    பெண் பலி

    பெண் பலி

    இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு லக்னோவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்த பெண் நேற்று இரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    English summary
    Unnao rape victim who was set to fire by five men including 2 rapists, died despite getting treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X