தீண்டாமை.. ஜாதிய வன்மம்.. ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுப்பு.. முகத்தில் எச்சில் துப்பி கொடுமை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டியலினத்தவர் எனக்கூறி ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுத்து அவரை தாக்கி முகத்தில் எச்சில் துப்பிய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகராக லக்னோ உள்ளது. இங்கு வினித் குமார் என்பவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஜோமாட்டோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் லக்னோவில் வசித்து வரும் ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இதையடுத்து அந்த ஆர்டரை வினித்குமார் பெற்று கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத ரீதியிலான மோதல்: ஒரே மதத்தைச் சேர்ந்த 36 பேர் கைது

பட்டியலினத்தவர் எனக்கூறி...
இதையடுத்து ஓட்டலில் அவர் உணவு வாங்கி கொண்டு ஆர்டர் செய் நபரின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த நபரிடம் வினித் குமார் உணவு வழங்கினார். அப்போது அந்த நபர் வினித் குமாரின் பெயர், ஜாதியை கேட்டுள்ளார். இதனை வினித் குமார் கூற மறுத்துள்ளார். இருப்பினும் வினித் குமாரின் ஜாதியை அறிந்த அந்தநபர் பட்டியலினத்தவர் எனக்கூறி அவரிடம் உணவை வாங்க மறுத்துள்ளார்.

முகத்தில் எச்சில் துப்பி...
மேலும் உணவை அங்கிருந்து கொண்டு செல்லும்படி அவர் வலியுறுத்தி தீண்டாமையை கடைப்பிடித்துள்ளார். மேலும் வினித் குமார் ஆர்டரை ரத்து செய்யும்படி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர் வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் சில நபருடன் சேர்ந்து வினித் குமாரை தாக்கியுள்ளார்.

உதவிய போலீஸ்
மேலும் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வினித்குமார் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார் மோட்டார் சைக்கிளை பெற்று கொண்டனர். மேலும் வினித்குமாரையும் மீட்டனர். இதுதொடர்பாக வினித் குமார் போலீசில் புகார் செய்தார்.

தீவிர விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஸ்டி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்னர். முதற்கட்டமாக அந்த பகதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள வருகிறது. இதுபற்றி லக்னோ கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் காசிம் அபிடி கூறுகையி், ‛‛கண்டோன்மென்ட் ஏசிபி தலைமையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவளம் தொடர்பாக இருதரப்பிடமும் விசாரிக்கப்பட உள்ளது'' என்றார். பசிக்கு உணவு டெலிவரி செய்த ஜோமாட்டோ ஊழியரிடம் ஜாதியை கேட்டு தீண்டாமையை கடைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.