லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழி பாடமான இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுத்தேர்வு முறைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவது உண்டு. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

up 5 lakh students fail in hindi paper

அதேபோல் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் போலி சான்றிதழ்கள் பெற்று அம்மாநில மக்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கின்றனர் என்பதும் குற்றச்சாட்டு. ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களின் பொதுத்தேர்வு முடிவுகள் பேசுபொருளாகி வருகின்றன.

இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தாய்மொழியான இந்தி பாடத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறாதது பெறும் சர்ச்சையாகி உள்ளது.

தேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்தேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்

இந்தி தேர்வை மொத்தம் 29.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் 23.76 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். தாய்மொழிப் பாடத்திலேயே இத்தனை லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை; ஆனால் கணிதம், அறிவியல் பாடங்களில் இதைவிட அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியிலேயே படிக்க தெரியாத மாணவர்கள் பிற பாடங்களில் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும்? என்பதுதான் கல்வியாளர்கள் கேள்வி.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழி பாடமான இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாதது சர்ச்சையாகி உள்ளது.

English summary
A total of 29.50 lakh students appeared in Hindi paper and of these only 23.76 lakh could pass in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X