• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"லுங்கி, தொப்பி".. அகிலேஷ் ஆட்சிக்கு வந்தால்.. இப்படித்தான் இருக்கும்.. வீடுவீடாக போய் சொன்ன அமித்ஷா

Google Oneindia Tamil News

லக்னோ: அகிலேஷ் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் உபியில் குண்டர்களின் ராஜ்ஜியம் மறுபடியும் தலைதூக்கும்.. ஆனால், இதுவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளம் பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.. அகிலேஷ் ஆட்சியை "குண்டர்களுடன்" தொடர்ந்து ஒப்பிட்டு பாஜக மேலிடம் பேசி வருவது பரபரப்பை கூட்டி வருகிறது,

  BJP-யின் வீடு-வீடு பிரச்சாரம்...Akhilesh ஆட்சி குண்டர்கள் சாட்சி | Oneindia Tamil

  கடந்த எம்பி தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உபியில் கிடைத்த அதிகமான தொகுதிகளே அடித்தளமிட்டன.. 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பாஜக...

  இப்போதும் மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், உபியை தன்னுடைய கோட்டையாக கையில் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக மேலிடம் நன்றாக உணர்ந்துள்ளது.

  ஆட்டத்தை துவங்கும் சோனியா.. பட்ஜெட்டில் எழுப்பப்படும் பிரச்சனைகள் என்ன?.. சீனியர்களுடன் இன்று ஆலோசனைஆட்டத்தை துவங்கும் சோனியா.. பட்ஜெட்டில் எழுப்பப்படும் பிரச்சனைகள் என்ன?.. சீனியர்களுடன் இன்று ஆலோசனை

  அகிலேஷ்

  அகிலேஷ்

  அதனால்தான், இந்த முறையும் பாஜக தலைவர்கள் உபியில் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றனர்.. இதில் அமித்ஷா கூடுதலாக கவனம் செலுத்தி வருவது மேற்கு உத்தரபிரதேசத்தில்தான்.. மேற்கு உத்தர பிரதேச பொறுப்பையும் அமித்ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்... இதற்கு காரணம், மாநிலத்தின் பல பகுதிகளை போலவே, மேற்கு உபியிலும் அகிலேஷூக்கு ஆதரவுகள் பெருகிவருவதுதான்.. இந்த மேற்கு உபியானது பாஜகவுக்கு ஆதரவான பகுதியாகும்.. இதை யார் கையிலும் விட்டுவிடக்கூடாது என்பதே பாஜகவின் ஒரே குறிக்கோளாகும்..

  அமித்ஷா

  அமித்ஷா

  அதற்காக ஒரு உள்துறை அமைச்சர், இங்கே வீடு விடாக செல்லும் அளவுக்கு பாஜக கீழிறங்கி பிரச்சாரத்தை நடத்தி கொண்டிருக்கிறது.. நேற்றுகூட இங்கு வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்த அமித்ஷா பேசியபோது, "உத்தரபிரதேசத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விமர்சிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எந்த தகுதியும் கிடையாது.. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் உபியில் குண்டர்களின் ராஜ்ஜியம் மறுபடியும் தலைதூக்கும்.. இதுவே பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளர்ச்சி பாதையில் நடைபோடும்... எங்கள் ஆட்சி வெளிப்படை தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது..

  குற்றச்சாட்டுகள்

  குற்றச்சாட்டுகள்

  எங்கே, நாங்க யாராவது ஊழல் செய்துவிட்டதாக சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.. எங்கள் அரசியல் எதிரி கூட எங்களை அப்படி குற்றஞ்சாட்ட முடியாது. இதுக்கு முன்னாடி இங்கே ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட ஜாதியினருக்காக மட்டுமே பணியாற்றினார்கள்.. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்திற்கான கட்சியாக இருப்பது பாஜக மட்டுமே" என்றார்.

  அகிலேஷ் யாதவ்

  அகிலேஷ் யாதவ்

  அகிலேஷ் யாதவ் ஆட்சியை குண்டர்களுடன் ஒப்பிட்டு அமித்ஷா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இப்படி பாஜக மேலிடம் அகிலேஷை தூற்றுவது இது முதல் முறை கிடையாது.. இப்படித்தான் 2 மாதத்துக்கு முன்பு பிரயாக்ராஜில் நடந்த வியாபாரிகள் கூட்டம் ஒன்றில் சீனியர் தலைவர் கேசவ் பிரசாத் பேசும்போது, "2017-க்கு முன்பு இந்த உத்தரபிரதேசம் எப்படி இருந்தது? வியாபாரிகள், நிம்மதியாக இருந்தார்களா? லுங்கி அணிந்திருந்த நபர்களால் வியாபாரிகள் மிரட்டப்பட்டனர்.. முகமூடி கட்டிக் கொண்டு, லுங்கி, தலையில் தொப்பி அணிந்து, கையில் துப்பாக்கியுடன் நடமாடி கொண்டிருந்தனர் அந்த குண்டர்கள்..

  ஒழுங்குமுறை

  ஒழுங்குமுறை

  அந்த அளவுக்கு சமாஜ்வாடி கட்சியின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது.. ஆனால் 2017-க்கு பிறகு, பாஜக ஆட்சி அமைந்த பிறகு, அப்படி குண்டர்களை எங்காவது நீங்கள் பார்க்க முடிந்ததா? லுங்கி சாப் எனப்படும் அந்த குண்டர்கள் இப்போது இல்லை என்றால் அதற்கு காரணம், இந்த பாஜக ஆட்சிதான்" என்று பேசியிருந்தார்.. அதாவது, அகிலேஷ் ஆட்சியானது குண்டர்கள் ஆட்சி என்பதை பாஜக தலைவர் மீண்டும் மீண்டும் அங்கே பதிய வைக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்பதே தற்சமய கள நிலவரம்..!

  English summary
  up assembly election 2022: Goonda raj return Akhilesh yadav Samajwadi party, says Amit shah
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X