லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோமியத்தை தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் கொரோனா வராது- சொல்வது உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங்

Google Oneindia Tamil News

லக்னோ: பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதுமாம்... கொரோனா நம்மைத் தாக்காது என்று உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் டெமோ வீடியோ வெளியிட்டிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.

இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு

உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை தடுக்க லாக்டவுன்

கொரோனாவை தடுக்க லாக்டவுன்

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என இன்னொரு பக்கம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் லாக்டவுனை அமல்படுத்தி வருகின்றன.

கோமியத்தை முன்வைத்து

கோமியத்தை முன்வைத்து

ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டும் கொரோனாவுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது மருந்துகளை சொல்லி வருகின்றனர். அதிலும் பசுவின் கோமியத்தை முன்வைத்து பாஜக பிரமுகர்கள் மட்டுமல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட பேசிவருவதுதான் கடும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது.

பாஜக எம்.எல்.ஏ.

பாஜக எம்.எல்.ஏ.

இந்த பட்டியலில் இணைந்திருப்பவர்தான் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். இம்மாநிலத்தின் பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்.எல்.ஏ.தான் சுரேந்திர சிங். இவர் டெமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோமியம், ஜில் தண்ணீர் மிக்ஸ் மருந்தாம்

கோமியம், ஜில் தண்ணீர் மிக்ஸ் மருந்தாம்


அதாவது பசுவின் கோமியத்தை ஜில் தண்ணீரில் மிக்ஸ் செய்து எப்படி குடிக்க வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ. அதாவது காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இப்படி பசு கோமியம் பிளஸ் தண்ணீர் மிக்ஸை குடித்தால் கொரோனா வரவே வராது என்கிறார் இந்த சுரேந்திர சிங்.

சுரேந்திர சிங்குக்கு கடும் எதிர்ப்பு

வட இந்திய மாநிலங்கள் பெரும்பாலும் அடிப்படை சுகாதார கட்டமைப்பு கொண்டவையே அல்ல. இதனால்தான் பெருமளவு கொரோனா மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் மக்கள் பிரதிநிதிகளான சுரேந்திர சிங் போன்றவர்கள், கோமியம் குடியுங்க... கொரோனா வராது என பேசுவதும் வீடியோ வெளியிடுவதும் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

English summary
BJP MLA Surendra Singh in UP's Ballia claimed drinking cow urine has protected him from coronavirus. He also recommended people to 'drink cow urine with a glass of cold water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X