லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாற்றில் இல்லாத அளவு.. பணத்தை வாரி இறைத்த யோகி அரசு! உ.பி. பட்ஜெட்டில் மாஸ் திட்டங்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இன்று தனது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, ரூ. 5,12,860 என்ற அளவுக்கு அதிக மதிப்புக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் கன்னா சட்டசபையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

5 லட்சத்து 12 ஆயிரத்து 860 கோடி மதிப்புள்ளது என்பதால், இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பு ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் கோடியாகும்.

2022ம் ஆண்டு உ.பி.யில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. எனவே, அதற்கு ஏற்ப கவர்ச்சிகர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதோ யோகி அரசு பட்ஜெட்டில் வெளியாகியுள்ள முக்கிய திட்டங்கள் குறித்த ஒரு பார்வை:

 அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல் அதிமுக அரசை தூக்கி எறிய மக்கள் தயார்... கே.எஸ். அழகிரி விளாசல்

அயோத்தி

அயோத்தி

யோகி ஆதித்யநாத்தின் கனவு திட்டமான கங்கா அதிவேக நெடுஞ்சாலைக்கு (டெல்லியில் இருந்து பிரயாகராஜ் வரை) ரூ .2,000 கோடி ஒதுக்கீடு. டெல்லி-மீரட் பிராந்திய விரைவான போக்குவரத்து திட்டத்திற்கு ரூ .900 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. வாரணாசியில் கலாச்சார மையம் அமைக்க 180 கோடி, சுற்றுலாப் பிரிவின் மேம்பாட்டிற்காக 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோரக்பூரின் ராம்கர் தாலில் நீர் விளையாட்டுகளுக்கு ரூ .25 கோடி வழங்கப்படும். ராமர் கோவில் அமைய உள்ள அயோத்தியை, ஒரு ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க யோகி அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் உயர்மட்ட வசதிகளை ஏற்படுத்த 85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துளசி நினைவு கட்டடத்திற்கு 10 கோடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி

அயோத்தி

யோகி ஆதித்யநாத்தின் கனவு திட்டமான கங்கா அதிவேக நெடுஞ்சாலைக்கு (டெல்லியில் இருந்து பிரயாகராஜ் வரை) ரூ .2,000 கோடி ஒதுக்கீடு. டெல்லி-மீரட் பிராந்திய விரைவான போக்குவரத்து திட்டத்திற்கு ரூ .900 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. வாரணாசியில் கலாச்சார மையம் அமைக்க 180 கோடி, சுற்றுலாப் பிரிவின் மேம்பாட்டிற்காக 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோரக்பூரின் ராம்கர் தாலில் நீர் விளையாட்டுகளுக்கு ரூ .25 கோடி வழங்கப்படும். ராமர் கோவில் அமைய உள்ள அயோத்தியை, ஒரு ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க யோகி அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் உயர்மட்ட வசதிகளை ஏற்படுத்த 85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துளசி நினைவு கட்டடத்திற்கு 10 கோடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.2000 கோடி

ரூ.2000 கோடி

கவுதம்புத்நகர் மாவட்டத்தில் யூதாரில் புதிய விமான நிலையம் அமைக்க உத்தரபிரதேச அரசு ரூ .2,000 கோடி ஒதுக்கியுள்ளது. பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ திட்டத்தின் கீழ் 68 மாவட்டங்களில் பெண் சிசு கொலையை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். முதல்வர் கன்யா சுமங்கல யோஜனாவுக்கு ஆயிரம் 200 கோடி ஒதுக்கப்படும்.

பெண்களுக்கு நிதி

பெண்களுக்கு நிதி

ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஆதரவற்ற பெண்கள், அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக 500 கோடி தொகை நேரடியாக பயனாளியின் கணக்கிற்கு, அனுப்பப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் 432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யோகி அரசு உ.பி.யின் பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்க உள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ .358 கோடி ஒதுக்கப்படும். ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோரக்பூர் மற்றும் பிற நகரங்களுக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பிரதமர் வீட்டுவசதிக்கு கீழ் 5 லட்சம் வீடுகள் கட்ட ரூ .6240 கோடி ஒதுக்கீடு, ஸ்வச் பாரத் மிஷனுக்காக ரூ .5,791 கோடி, புனல் மின்சாரம் மற்றும் நமாமி கங்கே மற்றும் கிராமப்புற நீர் வழங்கலுக்கான 6 ஆயிரம் கோடியில், அடல் நிலத்தடி நீர் திட்டம். காசி விஸ்வநாதர் கோவில் நடைபாதை மேம்பாட்டுக்கு 200 கோடி ரூபாய், அயோத்தி விமான நிலைய மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

லேப்டாப்

லேப்டாப்

பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ திட்டத்தின் கீழ், மாநில அளவில் முதலிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு சிறப்பு பரிசு கிடைக்கும். பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரில், முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். கிராமங்களில் செயல்படுத்தப்படும், ஜல் ஜீவன் மிஷனுக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அடல் உண்டு உறைவிட பள்ளிகள் வளர்ச்சிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

English summary
Suresh Khanna allotted Rs 5,12,860 crore budget for 2020-21, which happens to be the biggest-ever state Budget. In the previous year, the government had allotted Rs 4.79 lakh crore budget for the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X