லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி

Google Oneindia Tamil News

லக்னோ: இடம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்திருந்த 1000 பேருந்துகளை மாநில எல்லைக்குள் நுழைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து போதுமான வசதிகள் இல்லாததால் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்புவதில் பெரும் துயரங்கள் நிகழ்ந்தது. அடுத்தடுத்து விபத்துகளில் இடம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர்.

UP CM Yogi Adityanath accepts on Priyanka Gandhis 1,000 buses for migrants

இந்த நிலையில் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1,000 பேருந்துகளில் தொழிலாளர்களை அழைத்து வருவதாகவும் அந்த பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பி இருந்தார்.

இடம்பெயர் தொழிலாளர்கள்... ராணுவத்தை அனுப்பி உதவ கோரி தர்ணா- டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா கைதுஇடம்பெயர் தொழிலாளர்கள்... ராணுவத்தை அனுப்பி உதவ கோரி தர்ணா- டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா கைது

இதனிடையே பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பேருந்துகள் மாநில எல்லைகளுக்குள் வர முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

English summary
UP CM Yogi Adityanath has accepted on Cong. General Secretary Priyanka Gandhi's 1,000 buses for migrant workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X