லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலையை முட்டி முட்டி கதறி அழுது.. யோகியின் மனசையே அடியோடு மாற்றிய பெண்.. தெறி வீடியோ..!

9 வயது சிறுமியின் கண்ணீரை கண்டு மனம் மாறினார் உபி முதல்வர் யோகி

Google Oneindia Tamil News

லக்னோ: போலீஸ் ஜீப்பில், தன் தலையை முட்டி முட்டி அழுகிறாள் 9 வயது சிறுமி.. இந்த குழந்தை போலீசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சும் வீடியோவை பார்த்த உபி முதல்வர் யோகியின் மனசே கரைந்துவிட்டது.. அதன்மூலம் ஒரு புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

வடமாநிலங்களில் காற்றின் தரம் மோசமாகி வருகிறது.. அதனால், தலைநகர் டெல்லி முதல், ஒடிசா, ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடையும் விதிக்கப்பட்டது.

அதனால் அங்கு பட்டாசுகளை விற்பதும் இல்லை. இந்நிலையில், உபியில் நவம்பர் 12-ம் தேதி ஒருவர் தடையை மீறி பட்டாசு விற்றுள்ளார்.. புலந்த்சார் குர்ஜா நகரிலுள்ள முண்டா கேதா சாலையில்தான் அந்த நபர் பட்டாசை கஸ்டமர்களுக்கு விற்றுள்ளார்

"கலர்" மாறுகிறதா திமுக.. திடீரென ரூட்டை திருப்பி.. உடன்பிறப்புகளை திக்குமுக்காட செய்த தலைவர்கள்..!

ஜீப்

ஜீப்

இந்த தகவல் அறிந்த போலீசாரும், பட்டாசு விற்ற அந்த நபரை கைது செய்து, விசாரணைக்கு கொண்டு செல்ல போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்,. இதை பார்த்த அந்த நபரின் குழந்தை பதறிவிட்டது. தன் அப்பாவை போலீசார் கைது செய்வதை பார்த்து கதறி கதறி அழுதாள்.. அந்த குழந்தைக்கு 9 வயசுதான் ஆகிறது.. போலீஸ் ஜீப்பிற்கு சென்று, தன் அப்பாவை விட்டுவிடுமாறு போலீஸாரிடம் கெஞ்சுகிறாள் அந்த குழந்தை.

போலீசார்

இதை பார்த்த போலீசாருக்கு என்ன சொல்வதே என்று தெரியாமல், அப்பாவை விடுவிக்க முடியாது என்று மறுக்கிறார்கள்.. உடனே அந்த குழந்தை, அதே போலீஸ் ஜீப்பில் தன் தலையை முட்டி, முட்டி அழுகிறாள்.. இதை அங்கிருந்தோர் யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.

யோகி

யோகி

இந்த வீடியோ பெரும் வைரலானது.. கடைசியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்துக்கும் இது சென்றது.. வீடியோவை பார்த்த முதல்வர், உடனடியாக அந்த குழந்தையின் அப்பாவை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.. அதன்பேரில் உடனடியாக கைதான அப்பாவும் விடுவிக்கப்பட்டார். அதாவது மறுநாள் குழந்தைகள் தினத்தன்று, அப்பாவை விடுவித்து கொண்டு போலீசார் வீட்டுக்கு வந்தனர்..

கதறல்

கதறல்

வரும்போது, அந்த குழந்தைக்கு நிறைய கிஃப்ட் பொருட்களையும், ஸ்வீட்டுகளையும் வாங்கி கொண்டு வந்து, குழந்தையிடம் தந்து தீபாவளி வாழ்த்துக்களை சொன்னார்கள்.. சிறுமியின் கதறலை பார்த்து, உபி முதல்வர் பிறப்பித்த அந்த அதிரடி உத்தரவும், போலீசாரின் "ஸ்வீட் ஷாக்"கும்தான் இந்த தீபாவளிக்கு உபி மக்களால் மறக்க முடியாத சம்பவமாகும்!

English summary
UP CM Yogi, orders release of fire cracker sellers, and 9 year old girl crying video viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X