லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூதாட்டியை காலில் விழவைத்த உ.பி. இன்ஸ்பெக்டர்.. அதிரடி மாற்றம்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மூதாட்டி ஒருவரை காலில் விழ வைத்த இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த குடம்பா பகுதி காவல் நிலையம் நாட்டிலேயே 3-வது சிறந்த காவல் நிலையமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் அறிவிக்கப்பட்டதாகும். அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தேஜ் பிரகாஷ் சிங் என்பவரின் செயல் தான் அந்த காவல் நிலையத்தின் மாண்பையே குலைத்துவிட்டது.

Up cop suspended after video of elderly woman falling at his feet goes viral

சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு சீருடையுடன் அவர் கால்மேல் போட்டு கொண்டு தமது காவல்துறை பரிவாரங்கள் சூழ, மிகுந்த ஆணவத்துடன் உட்கார்ந்திருக்கிறார். அவர் முன்பாக, 75 வயது கொண்ட பெண்மணி ஒருவர் வருகிறார்.

தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்த தமது பேரன் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் பதிவிடுமாறு கெஞ்சி கதறுகிறார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ கொஞ்சம் கூட அதை கவனியாமல் மூதாட்டியை எள்ளி நகையாடுகிறார். அதனால் மனவேதனை அடைந்த அந்த மூதாட்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்மிட்டும், காலைத்தொட்டு வணங்கியும் கெஞ்சுகிறார்.

அப்போதும் மனமிரங்காமல் இன்ஸ்பெக்டர் அமர்ந்தபடியே உட்கார்ந்திருக்கிறார். ஆனால், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து உத்தரபிரதேச அரசு அந்த இன்ஸ்பெக்டரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்துள்ளது.

உயரதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு... அந்த மூதாட்டியின் கோரிக்கையை பரிசீலித்த காவல்துறை அதிகாரிகள் தொழிற்சாலை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். அதே நேரத்தில் அந்த மனிதநேயமற்ற இன்ஸ்பெக்டரின் செயல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A cop from award winning police station in Gudamba, Lucknow was transferred after a video surfaced on several social media platforms showing an elderly woman pleading at his feet to file an FIR after the death of her grandson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X