லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ..பி.யில் 30 பேரின் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' நாய்.. சிலிண்டர் வெடித்து சாவு

Google Oneindia Tamil News

லக்னோ: தீப்பிடித்து இருப்பதை மோப்பம் பிடித்து, சத்தமாக குரைத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய நாயை, யாருமே காப்பாற்றாமல் விட்டுச்சென்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பாந்தா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.அந்த கட்டிடத்தில் 3 வது மற்றும் 4வது கட்டிடத்தில் பலர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்கள். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அங்கு கீழ்தளத்தில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது.

UP Dog saves lives of more than 30 people; dies later in a cylinder blast

இதனை மோப்பம் பிடித்த நாய், தனது எஜமானுக்கு அதை உணர்த்தும் வகையில் சத்தமாக குரைத்துள்ளது. இதனை பார்த்த நாயின் எஜமான் வெளியில் வந்துள்ளார். அவரைப் போலவே சிலரும் வெளியே வந்துள்ளனர்.

அப்போது தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஓடினார்கள். இதைத்தொடர்ந்து உயிரை காப்பாற்றி கொள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 30 பேரும் ஓடி தப்பித்தார்கள். ஆனால் அவர்களை காப்பாற்றிய நாய் சங்கிலி கொண்டு கட்டப்பட்டு இருந்ததால் தப்ப முடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டது.

4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்!4.3 கோடி லைக்ஸ்.. உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி.. 2ம் இடத்தில் டிரம்ப்!

இதனால் 30 பேரின் உயிரை காப்பாற்றிய நாய் கடைசியில் சிலிண்டர் வெடித்து சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்தமும் இடிந்து தரைமட்டமானது. தங்களை காப்பாற்றிய நாயை யாருமே காப்பாற்ற முன்வராதது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
UP cylinder blast: Dog saves lives of more than 30 people; dies later in a cylinder blast
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X