லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்ப பாரு மோடிஜியை, யோகிஜியை.. ராகுல், பிரியங்கா கண்களை டெஸ்ட் செய்யணும்.. உபி துணை முதல்வர் கிண்டல்

ராகுல், பிரியங்கா காந்தியை சரமாரி உபி துணை முதல்வர் சரமாரி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: "ராகுல் காந்தியும் சரி, பிரியங்கா காந்தி வதேராவும் சரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் என்னதான் நடக்கிறது என்பதை பார்க்கக்கூட விரும்புறது இல்லை... அவங்களுக்கு பார்வையில ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்... பிரியங்கா, ராகுல் யாராக இருந்தாலும், அவங்க கண்களை டெஸ்ட் பண்ணிக்கிறது நல்லது என்று உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கிண்டடித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை தலைதூக்கியபடியே உள்ளது.. ஒருகட்டத்தில் இவர்களின் இன்னல்களை பொறுக்க முடியாமல்தான், ராகுல்காந்தியும், பிரியங்காவும் அத்தொழிலாளர்களுக்காக தெருவில் இறங்கினர்..

அவர்களுக்காக குரல் கொடுத்ததுடன்,தங்களால் ஆன உதவிகளை செய்தனர்.. இப்போதும் செய்து வருகின்றனர்.. தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு

 பிரியங்கா

பிரியங்கா

இது பாஜக தலைவர்களுக்கு கடுப்பையும், எரிச்சலையும் தந்து வருகிறது.. அந்த வகையில் உபியின் துணை முதல்வர் மவுரியா ராகுல், பிரியங்காவை கிண்டலடித்து ஒரு கருத்து சொல்லி உள்ளார். அதில்,"நான் எப்பவுமே பிரியங்கா வதேராவை சீரியஸாக எடுத்து கொள்வதே கிடையாது. நாங்க அவரை ஏற்கனவே பிரியங்கா ட்விட்டர் வதேரா-ன்னுதான் கூப்பிட்டுட்டு இருக்கோம்.. ஏன் என்றால் அவர் 2, 3 நாட்களுக்கு ட்வீட் போடுவார்.. அவர் ட்வீட் போட்டதும் எல்லா மீடியாவும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிச்சிடும்.. சோஷியல் மீடியா அவரை "ரொம்ப முக்கியமான நாட்டு தலைவர்" என்று வெளிப்படுத்தும்.

 உத்திரபிரதேசம்

உத்திரபிரதேசம்

ஆனால் அவர் உபிக்கு தனது கட்சிக்காக பிரச்சாரத்துக்கு வந்தபோது, தன் சகோதரரை பிரதராக்கி விடலாம் என்று நம்பிக்கையோடுதான் வந்தார்.. ஆனால் பாவம், அவரது தொகுதியில்கூட அவரால் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை.. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியிடம் தோல்விதான் அடைந்தார்.

 கண்ணோட்டம்

கண்ணோட்டம்

உபியில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய முக்கியத்துவத்தையும், அடித்தளத்தையும் இழந்துவிட்டது.. பாஜக ஆளும் மாநிலங்களை எல்லாம் அவர் ஒருவித விமர்சனக் கண்ணோட்டத்துடனே பார்க்கிறார்.. அதனால்தான் பாஜக மாநிலங்களில் நடக்கும் எந்த நல்ல விஷயங்களும் அவர் கண்களுக்கு தெரிவதே கிடையாது. மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் என்ன நடக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியினர் பார்க்கவும் விரும்புவதில்லை.. அவங்களுக்கு எல்லாம் கண்களில் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்.

நெகட்டிவ்

நெகட்டிவ்

ராகுல் காந்தியோ, பிரியங்கா வதேராவோ யாரா இருந்தாலும் சரி, அவங்க கண்களை நன்றாக டெஸ்ட் செய்துகொள்ளணும். அதுதான் நல்லது. எப்ப பாரு, மோடிஜி, யோகிஜியை நெகட்டிவ் கண்ணோட்டத்திலேயே பார்த்துட்டு இருந்தார்கள் என்றால், அதுக்கு தீர்வுன்னு ஒன்னு கிடையாது.. அதனால நல்ல டாக்டரா பார்த்து, தரமான கண்ணாடிகளை இவங்க போட்டுக்கணும்னு நான் பரிந்துரை செய்கிறேன்" என்று மிக மோசமாக கிண்டல் செய்துள்ளார் துணை முதல்வர் மவுரியா... இந்த கருத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கொதிப்படைய வைத்து வருகிறது.

English summary
up dy chief minister keshav prasad has criticized rahul and priyanka gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X