லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அகிலேஷூக்கு எகிறும் மவுசு.. பாஜக மீது புது குண்டை தூக்கி போட்ட சிட்டிங் எம்எல்ஏ.. உ.பி. பரபரப்பு

பாஜக மீது பகீர் குற்றச்சாட்டை சீனியர் தலைவர்கள் முன்வைத்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: நாளுக்குநாள் அகிலேஷ் யாதவின் மதிப்பு உபியில் எகிறி வரும் நிலையில், பாஜக மீதான குற்றச்சாட்டுகள் பெருகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில், பாஜகவில் இருந்து விலகி முக்கிய புள்ளி, பரபரப்பு குற்றச்சாட்டை அக்கட்சியின் மீது முன்வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.. வரும் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட தேர்தல் நடக்கிறது..

எனவே, பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.. இதனால் 4 முனை போட்டி உபியில் நிலவுகிறது.. குறிப்பாக, இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

உ.பி: முதல் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்- அகிலேஷ் ஆரூடம் உ.பி: முதல் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்- அகிலேஷ் ஆரூடம்

போட்டி

போட்டி

இத்தனை காலமும், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், ஒவ்வொரு தொகுதியையுமே தான் போட்டியிடும் தொகுதியாகக் கருதி கவனம் செலுத்தப்போவதாகவும் அகிலேஷ் யாதவ் சொல்லியிருந்த நிலையில், அவர் போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற அழுத்தம் கட்சிக்குள் நிலவி வந்தது.. இறுதியில், அகிலேஷ் யாதவ் தேர்தலில் நேரடியாகவே போட்டியிடுவார் என்று அறிவிப்பும் வெளியாகி விட்டது.

 சமாஜ்வாதி

சமாஜ்வாதி

பாஜக - சமாஜ்வாடி இடையே கடும் போட்டி இருக்கும் என்கிறார்கள்.. ஆனால், பாஜகவைவிட, அகிலேஷூக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டிருக்கிறது என்றும், அதனால்தான் பாஜக வீட்டுக்குவீடு பிரச்சாரம் செய்யும் நிலைமைக்கு இறங்கிவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்கிறார்கள்.. ஆனால், இதுவரை வெளிவந்த தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை பார்த்தால், பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது..

 பாஜக முன்னிலை

பாஜக முன்னிலை

7 முன்னணி ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டதில், 7 இடங்களிலும் பாஜகவே டாப் இடத்தை பெற்றிருக்கிறது.. 2வது இடத்தைதான் அகிலேஷ் பெறுகிறார்.. காங்கிரஸ் இந்த லிஸ்ட்டிலேயே இல்லை.. மற்றொருபுறம், பாஜகவில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி அகிலேஷ் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள்.. இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட சுமார் 12 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகிவிட்டார்கள்.. அதிலும் 3 சீனியர்கள் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியது பாஜகவுக்கு பெரும் மைனஸ் ஆக பார்க்கப்பட்டு வருகிறது..

பாஜக

பாஜக

இவர்கள் விலகியது மட்டுமல்லாமல் நேராக அகிலேஷ் கட்சியில் இணைந்தும் விட்டது, அகிலேஷூக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய 3 சீனியர்களில் ஒருவர், இப்போது புது குண்டை அக்கட்சி மீது தூக்கிப்போட்டுள்ளார்.. அவர் பெயர் ஜிதேந்திர வர்மா.. இவர் பாஜகவின் எம்எல்ஏவாக இருக்கிறார்.. அந்த கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்த நிலையில், ஜிதேந்திர வர்மா ஒரு முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Recommended Video

    Uttar Pradesh காங்கிரஸ் CM வேட்பாளர் Priyanka Gandhi? | Oneindia Tamil
     குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "நான் பாஜகவுக்காக பணியாற்றினேன்.. ஆனால் எதையுமே அவங்க கண்டுகொள்ளவில்லை.. கட்சிக்காக அவ்வளவு உழைத்த எனக்கு சீட் தரவே இல்லை.. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது... இவங்க அன்னைக்கு என்ன சொன்னாங்க? இளைஞர்களை ஊக்குவிப்போம் என்றுதானே பாஜக சொன்னார்கள்.. ஆனால், 75 வயது பெரியவருக்கு சீட் தந்திருக்காங்க.. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சிதான் வெற்றி பெற போகிறது.. மாநிலத்தில் ஆட்சி அமைக்க போகிறது.. உபி மக்கள் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம்" என்றார்.

    English summary
    UP Election: BJP MLA Jitendra Verma slams BJP and criticizes Seat Sharing issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X