லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ. 1 கோடி சம்பாதித்தாரா.. சர்ச்சையில் ஆசிரியை.. விசாரணை

Google Oneindia Tamil News

லக்னோவில் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா என்ற அரசு பள்ளி உள்ளது. இது மாநில அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டாபேஸ் உருவாக்கப்பட்டது.

லக்னோவில் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா என்ற அரசு பள்ளி உள்ளது. இது மாநில அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெளிப்படைத்தன்மைக்காக ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு தளம் உருவாக்கப்பட்டது.

இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு ஆசிரியை 25 பள்ளிகளில் பணியாற்றி 13 மாதங்களில் ரூ 1 கோடி ஊதியத்தை பெற்றுள்ளது தெரியவந்தது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல் ஜார்ஜ் ஃப்ளாய்ட்-க்கு நீதி கோரி போராட்டம்- முதியவரை கீழே தள்ளிவிட்ட நியூயார்க் போலீஸ்- வீடியோ வைரல்

பள்ளி ஆசிரியை

பள்ளி ஆசிரியை

விசாரணையில் மயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. இவர் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்தப் பள்ளியில் முழு நேரமாக பணியாற்றி வருகிறார். இவ்வாறிருக்கும் நிலையில் இவர் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியையாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார்.

ஆசிரியை

ஆசிரியை

அமேதி, அம்பேத்கார் நகர், ரே பரேலி, பிரயக்ராஜ், அலிகார் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார். இவர் டிஜிட்டல் தகவல் தளத்தில் இடம்பெற்றுள்ளதோடு 13 மாதங்கள், அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ 1 கோடியை ஊதியமாக ஏமாற்றி பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வித் துறை

கல்வித் துறை

எனினும் அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அவரது ஊதியம் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவர் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும் ஒரே வங்கிக் கணக்கை பயன்படுத்தியுள்ளாரா என கல்வித் துறை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அடிப்படைக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சதீஷ் திவிவேதி செய்தியாளர்களை சந்தித்தார்.

 வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மை

அவர் கூறுகையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆசிரியை அனாமிகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையெனில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக அந்த தகவல் தளத்தை டிஜிட்டல் டேட்டா பேஸை உருவாக்கினோம் என்றார்.

English summary
Uttar Pradesh teacher earns Rs 1 crore by working in 25 different schools. Probe ordered on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X