லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுட்டுக் கொல்லப்பட்ட கமலேஷ் திவாரி மகனுக்கு தற்காப்புக்கு துப்பாக்கி - உ.பி. அரசு #Kamlesh Tiwari

Google Oneindia Tamil News

Recommended Video

    கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்

    லக்னோ: பயங்கரவாதிகளால் உத்தரப்பிரதேசத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரியின் மூத்த மகனுக்கு தற்பாதுகாப்புக்காக லைசென்சுடன் கூடிய துப்பாக்கி வழங்க அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி நேற்று லக்னோவில் அவரது அலுவலகத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பரிசுப் பொருட்கள் வழங்குவது போல் வந்த மர்ம நபர்கள் இப்படுகொலையை நிகழ்த்தினர்.

    உட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்உட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்

    சூரத்தில் 3 பயங்கரவாதிகள் கைது

    இக்கொலை தொடர்பாக சூரத்தில் 3 பயங்கரவாதிகளை குஜராத் பயங்கரவாத தடுப்புப் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். இதனிடையே லக்னோ டிவிஷனல் கமிஷனர் முகேஷ் மேஷ்ராம் இன்று சிதாபூரில் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கமலேஷ் குடும்பத்துக்கு ஆறுதல்

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் முகேஷ் மேஷ்ராம் கூறியதாவது: கமலேஷ் திவாரியின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.

    லைசென்சுடன் துப்பாக்கி

    லைசென்சுடன் துப்பாக்கி

    முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு அரசு வீடு ஒதுக்கப்படும். மேலும் கமலேஷ் திவாரியின் மூத்த மகனுக்கு தற்பாதுகாப்புக்காக லைசென்சுடன் கூடிய துப்பாக்கி வழங்கப்படும். அவருக்கு அரசுப் பணிக்காக பரிந்துரைக்கப்படும். கமலேஷ் திவாரியின் குடும்பத்துக்கு தேவையான நிதி உதவிகள் செய்யப்படும். இப்படுகொலை சம்பவத்தை தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு முகேஷ் மேஷ்ராம் கூறினார்.

    கொலையாளிகள் ஒப்புதல்

    இதனிடையே இப்படுகொலை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச டிஜிபி ஓபி சிங் கூறுகையில், குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருக்கும் நபர்களிடம் விசாரணை நடத்திய போது கமலேஷ் திவாரியை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் இப்படுகொலையில் தொடர்பிருக்கிறது. இவ்வாறு ஓபி சிங் கூறினார்.

    English summary
    Lucknow divisional commissioner Mukesh Meshram who met Kamlesh Tiwari family today said that,A licensed weapon will be provided to the eldest son for self defence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X